மருத்துவ கல்லூரிகளில் 24 மணி நேரம் செயல்படும் தடுப்பூசி மையம்

அனைத்து மாவட்ட மருத்துவ கல்லூரிகளிலும் நாளை முதல் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் திட்டம் தொடங்கப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

Update: 2021-08-22 01:50 GMT

சென்னையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழகத்தில் முதன் முறையாக 24 மணி நேரம் இயங்கும் தடுப்பூசி மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா‌.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

மேலும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் 2 கோடி 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் முன்னிலையில் தமிழக சுகாதாரத்துறைக்கு வழங்கினர். இந்த நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்:-

தமிழகத்தில் முதன் முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் அதே போல் அரியலூரில் அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் 100சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாளை காலை சென்னையில் உள்ள 80 வயதிற்கு மேற்பட்டோருக்கு வீடுகளுக்கே தேடிச்சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளதாகவும் தெரிவித்த அவர் குறிப்பாக தமிழகத்தில் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தமிழ்நாடுஅமெரிக்க அறக்கட்டளை சார்பில்2.36 கோடி ரூபாயில் வழங்கப்பட்ட இந்த பொருட்கள் 15 மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் நாளை  சென்னையில் இருக்கும் அரசு பொது மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் .

அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளிலும் இத்திட்டம் தொடங்கப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக புளியந்தோப்பு கே. பி பார்க் கட்டிடத்தில் கொரனோ நோயாளிகளை தங்க வைத்ததால்தான் கட்டிடம் பலவீனமானது என்று கட்டுமான நிறுவனம் கூறியது குறித்த கேள்விக்கு போகாத ஊருக்கு வழி சொல்வது போல் உள்ளது என நகைச்சுவையாக பதிலளித்தார்.

Tags:    

Similar News