தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் : நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

Update: 2021-06-20 13:08 GMT

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (பைல் படம்)

சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்கூறியதாவது :

தமிழக அரசின் நிதிநிலைமை குறித்து சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் வெள்ளை அறிக்கை வெளியிடுவோம். பெட்ரோல், டீசல் விலையில் மாநில வரியைக் குறைப்பது தற்போதைக்கு சாத்தியமில்லை.

பெட்ரோல் மீது ரூ.10ஆக இருந்த வரியை ஒன்றிய அரசு ரூ.32.90ஆக உயர்த்தியுள்ளது. ரூ.32.90 வரியில் ரூ.31.50 ஒன்றிய அரசு எடுத்துக்கொள்கிறது. ரூ.32.90 வரியில் ரூ.1.4 மட்டுமே மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்குகிறது. பெட்ரோல், டீசல் மூலம் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ரூபாய் 336 கோடி வருவாய் குறைந்துள்ளது.

சர்வதே சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் மீதான வரியை ஒன்றிய அரசு உயர்த்துகிறது. பெட்ரோல், டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது. ரூபாய் 98 விற்கப்படும் பெட்ரோல் விலையில் ரூபாய் 70 ஒன்றிய அரசுக்கும், உற்பத்தி செலவுக்கும் செல்கிறது.

தமிழக அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் ரூபாய் 20 மட்டுமே கிடைக்கிறது. பெட்ரோல் பொருட்கள் மீதான மாநில வரியை குறைத்தால் அது மத்திய அரசுக்கு சாதகமாகவிடும்.

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய வரித்தொகையை ஒன்றிய அரசு தர மறுக்கிறது.முந்தைய அதிமுக அரசு ரூ.4 லட்சம் கோடி கடன் உள்ளதாக தவறாக தெரிவித்துள்ளது.

ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் கடன் வைத்து சென்றுள்ளது அதிமுக அரசு என அமைச்சர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News