மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லி சென்றது அனைத்துக் கட்சி குழு
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர் வளத்துறை அமைச்சரை சந்திக்க தமிழக அனைத்துக் கட்சி குழுடெல்லிக்கு சென்றது.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சென்னை தலைமை செயலாகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து முறையிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று தமிழக அனைத்துக்கட்சி குழுவினா் நீா்பாசனத்துறை அமைச்சரை சந்திக்கின்றனா்.
இந்த குழுவில் உள்ளதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேட்டி;
கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட அனுமதி பெற்று இருப்பது தமிழ்நாட்டுக்கு செய்கின்ற துரோகம்.கர்நாடகாவில் உள்ள தமிழ்நாட்டு மக்கள் மிக மோசமாக நடத்தப்படுவதை தடுப்பது தொடர்பாகவும் துறை சார்ந்த அமைச்சரை சந்தித்து பேச உள்ளோம்.
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாக மேகதாது அணை விவகாரம் உள்ளது. கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு சிறு துரும்பு அளவில் பாதிப்பு இருந்தாலும் அதன் எதிர்வினை பலமாக இருக்கும்.
தமிழ்நாட்டுக்கான நீர்வள உரிமையை முதலமைச்சர் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.இவ்வாறு கூறினாா்.