சென்னை எழும்பூரில்: சாலையோர வாசிகளுக்கு தினமும் உணவு வழங்கும் திட்டம்!
சென்னை எழும்பூரில் சாலையோர வாசிகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.;
அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது. உடன் தயாநிதிமாறன் எம்பி உள்ளார்.
சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு தினந்தோறும் உணவு வழங்கும் திட்டத்தை எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் முன்னிலையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்.பி. தயாநிதிமாறன் உள்ளிட்டோர் சாலை ஓரங்களில் வசிக்கும் நூறுக்கும் மேற்பட்டோருக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், செய்தித்தாள்களில் சாலையோரம் வாசிப்பவர்கள் உணவின்றி தவிப்பதாக செய்தி வெளியானது. யாரும் உணவின்றி வாழக்கூடாது என்ற நோக்கத்தோடு தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் பேரில் எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தினந்தோறும் உணவு வழங்கும் திட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம் என்றார்.