காசிமேட்டில் கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது
சென்னை காசிமேடு ஜிஎம் பேட்டை பகுதியில் கத்தியுடன் சுற்றித்திரிந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்;
சென்னை காசிமேடு பகுதியில் ரவுடியான அட்டு ரமேஷ் என்பவரை சில தினங்களுக்கு முன்பு கல்பாக்கம் அருகே மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார் அவருடைய உடல் நேற்று காசிமேடு பகுதியில் அடக்கம் செய்வதற்காக எடுத்து வரப்பட்டது.
இந்நிலையில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க வடக்கு மண்டல இணை போலீஸ் கமிஷனர் தலைமையில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
அப்போது தனிப்படை உதவி ஆய்வாளர் விஜய் மற்றும் காசிமேடு காவல் நிலைய தனிப்பிரிவு காவலர்கள் நல்லதம்பி மற்றும் முகமது காட்டுபாவா ஆகியோர் தலைமையில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
காசிமேடு ஜிஎம் பேட்டை பகுதியில் கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 பேரை கைது செய்து காசிமேடு என்2 காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இருவர் மீது ஏற்கனவே வழக்கு உள்ளது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து வினோத்குமார், சாம்சங், சுரேந்தர் ஆகிய மூன்று பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய புழல் சிறையில் அடைத்தனர்