சென்னை தண்டையார்பேட்டையில் கொரோனா நோயாளி தூக்குப்போடு தற்கொலை!
சென்னை தண்டையார்பேட்டை மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கூலித்தொழிலாளி (வயது 31) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஆறு மாதங்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த மே 19-ம் தேதி இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தண்டையார்பேட்டை புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவமனையில் இரண்டாவது மாடியில் 9வது வார்டில் இருந்த இவர் திடீரென மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த துப்புரவு ஊழியர்கள் அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் அவர் முன்னதாகவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இத் தற்கொலை தொடர்பாக தண்டையார்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.