சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை: சென்னை மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு

சென்னையில் சொத்துவரியை அக்.15ஆம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்

Update: 2021-10-05 13:04 GMT

மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி 

சென்னையில் சொத்துவரியை அக்.15ஆம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி தற்போது சொத்து வரியை வசூல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விரைந்து அனைவரும் சொத்து வரியை செலுத்திட மாநகராட்சி அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் தொகையை செலுத்துபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2021- 22 நிதிஆண்டின் முதல் அரையாண்டில் வருவாய்த்துறை மூலமாக ரூ.600.72 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டில் ரூ.382.30 மட்டுமே வரி வசூலிக்கப்பட்டிருந்தது. கடந்த 5 நிதியாண்டுடன் ஒப்பிடும் போது இந்த நிதி ஆண்டில் அதிகபட்சமாக வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியை அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5% அதாவது அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை பெற்று பயனடையலாம்.

www.chennaicorporation.gov.in என்ற இணையதளம் மூலமாக இ-சேவை மையங்களை பயன்படுத்தி அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தலாம் அல்லது செல்போன் செயலியை பயன்படுத்தியும் செலுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News