கொரோனா நிவாரணமாக 13 மளிகை பொருட்கள் வழங்கப்படும்
தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக 13 மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.;
2.11 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 13 மளிகைப் பொருட்கள் வழங்கப்படுகிறது. கோதுமை, ரவை, உப்பு, பருப்பு உள்ளிட்ட 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. வருகிற ஜூன் 3ம் தேதி கலைஞர் கருணாநிதி பிறந்த நாளன்று இத்திட்டம் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.