தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை செய்தார்.;

Update: 2022-01-04 16:15 GMT

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  

தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். ஏற்கெனவே கட்டுப்பாடுகளை தமிழக அரசு தொடங்கிவிட்ட நிலையில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் தமிழ்நாட்டிலும் இரவு ஊரடங்கோ அல்லது வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வார இறுதி நாட்களில் வழிபாட்டுத்தலங்கள் மூட சுகாதாரத்துறை பரிந்துரை செய்து உள்ளது.

இதனால் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் தடை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடைகளுக்கான நேரக் கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு உள்ளது.கூடுதல் கட்டுப்பாடுகள், அறிவுறுத்தல்கள் தொடர்பான அறிவிப்புவெளியாகவுள்ளது. மற்றபடி பொது போக்குவரத்திற்கான தடைக்கு வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

Tags:    

Similar News