மீன்பிடிதடைகால நிவாரணமாக ரூ.5000 வழங்கப்படும்:மு.க ஸ்டாலின் அறிவிப்பு
மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவ குடும்பங்களுக்கு ரூ.5000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடல் மீன் வளத்தை பேணிக்காத்திட தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையிலும், மேற்குக் கடற்கரைப் பகுதியில் ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து ஜூலை 31 ஆம் தேதி வரையிலும் 61 நாட்களுக்கு மீன் பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த காலகட்டத்தில் வங்கக் கடலில் மீன்பிடிக்க தடை காலம் உள்ளது.
இந்த இரண்டு மாத காலத்திற்கான நிவாரணத் தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.