மெரினா கடற்கரையில் சட்டவிரோத கடைகள் நடத்த வாய்ப்பில்லை: சென்னை மாநகராட்சி அதிரடி!

சென்னை மாநகராட்சியின் புதிய திட்டத்தின் காரணமாக இனி மெரினா கடற்கரையில் சட்டவிரோதமாக கடைகள் வைப்பது எளிதில் கண்டறியலாம்.

Update: 2021-06-13 09:56 GMT

சென்னை மெரினா கடற்கரை கடைகள். (பழைய படம்)

சென்னை மெரினா கடற்கரையில் புதிய கடைகள் திறக்கவும், அதற்காக ஸ்மார்ட் வண்டிகளை விநியோகிக்கவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.27 கோடி செலவில் சுமார் 900 கடைகள் அமைக்கும் பணியையும் தொடங்கியுள்ளது.

 ஏற்கனவே கடற்கரையில் கடைகள் வைத்திருந்த 60 சதவீதம் பேருக்கு இந்த ஸ்மார்ட் வண்டி கடைகள் அளிக்கப்படும் என்றும். மீதமுள்ள ஸ்மார்ட் கடைகள் புதிய விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது.

இந்த கடைகள் அமைப்பதற்கான விண்ணப்பங்களை சென்னை மாநகராட்சி கடந்த  ஏப்ரல் 3 ஆம் தேதி பெறத்தொடங்கியது. ஏப்ரல் 15 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 18-ஆம் தேதி விண்ணப்பங்கள் இறுதிசெய்யப்பட்டு குலுக்கல் நடைபெற்றது. குலுக்கல் முறையில் தேர்வானவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.

மேலும் இந்த திட்டம் புதிதாக தொழில் துவங்குவோருக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகராட்சியின் தரவுகளின்படி, மெரினாவில் சட்டவிரோத விற்பனையாளர்களின் எண்ணிக்கை 2,500-க்கும் அதிகமாக இருந்தது. இனி இந்த திட்டத்தின் மூலம் சட்டவிரோதமாக மெரினாவில் கடை நடத்துபவர்களை எளிதில் கண்டறியமுடியும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News