தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் குறித்து முக்கிய அறிவிப்பு..!

Update: 2021-06-05 14:15 GMT
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் குறித்து முக்கிய அறிவிப்பு..!
  • whatsapp icon

தமிழ்நாட்டில் மறு அறிவிப்பு வரும் வரை டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படாது என டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் வரும் ஜூன் 14 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து, டாஸ்மாக் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பபட்டிருக்கும் நிலையில், மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து அனைத்து மண்டல இயக்குனர்களுக்கும் மேலாண் இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகள் மூடி இருக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து கண்காணித்து கடைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News