தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 7 வரை நீடிக்குமா..?

தமிழக அரசு சார்பில் முக்கிய முடிவு நாளை வெளியாக வாய்ப்பு;

Update: 2021-05-21 10:38 GMT

கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த வழிமுறைகள் குறித்தும் வரும் 24 ஆம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் வரும் 22 ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 11:30 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப் பட உள்ளது. மேலும் இந்த கூட்டத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் குழுவுடனும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இதில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுபடுத்த ஊரடங்கை வரும் ஜூன் 7 வரை நீட்டிப்பு செய்ய ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக கருத்துக்கள் பரவி வருகின்றது.

Tags:    

Similar News