தமிழகத்தில் ஊரடங்கு தளர்வா? முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு செய்யப்படுகிறதா? முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

Update: 2021-06-04 04:23 GMT

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று  ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இதன்படி, முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று காலை 11.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர், சுகாதார செயலாளர், டிஜிபி ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வரும் 7-ம் தேதி காலை 6 மணியுடன் முடியும் நிலையில் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து கொரோனா குறைந்த மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி வருகின்றன.

#curfew #relaxed #TamilNadu? #ChiefMinister #MKStalin #advised #today

#தமிழகத்தில் #ஊரடங்கு #தளர்வா? #முதலமைச்சர் #முகஸ்டாலின் #இன்று #ஆலோசனை #lockdown #quarantine

Tags:    

Similar News