தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்குமா..?

மருத்துவ வல்லுநர் குழுவுடன் நாளை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை.;

Update: 2021-05-21 07:03 GMT

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மருத்துவ நிபுணர் குழு உடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் தற்போதுள்ள ஊரடங்கு திங்கட்கிழமை உடன் முடிவடையும் நிலையில், மருத்துவக் குழுவுடன் ஆலோசனைக்கு பிறகு முழு ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்பை ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News