சென்னை சேப்பாக்கத்தில் தூய்மைப்பணி: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆய்வு!
சென்னை சோப்பாக்கம் தொகுதியில் பெரிய அளவிலான தூய்மைப்பணி நடைபெற்று வருவதை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.;
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவில் வாகன போக்குவரத்து கிடையாது. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சென்னை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் மாஸ் கினீனிங் எனும் பெரிய அளவிலான தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் அந்த தூய்மைப்பணிகளை இன்று உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பார்வையிட்டார். உடன் அதிகாரிகள் சென்றனர்.