பாரதியாரின் 140 வது பிறந்த நாள் விழா: அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

பாரதியாரின் 140வது பிறந்த நாள் விழாவையொட்டி அமைச்சர்கள் பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Update: 2021-12-11 07:15 GMT

பாரதியாரின் 140வது பிறந்த தினத்தையொட்டி அமைச்சர்கள் சுப்ரமணியன், சாமிநாதன், சேகர்பாபு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மகாகவி பாரதியாரின் 140 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள மகாகவி பாரதியார் திருவுருவ சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள்  மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ,சாமிநாதன்,தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை த. வேலு, ஐ டிரிம்ஸ் மூர்த்தி, பிரபாகர் ராஜா, தொழிலதிபர் விஜி சந்தோஷம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  

தமிழ்நாடு முதல்வர் அவர்களால் பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு 14அறிவிப்புகள் செய்யப்பட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும் கல்வி நிலையங்களில் கட்டுரை போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. 

இதுபோன்று சுதந்திர போராட்ட தலைவர்களை மதிக்கின்ற் அரசு திமுக அரசு பாரதியார் பல்கலைக்கழகத்தில் அவரின் முழு உருவ சிலையை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் திறக்கப்பட்டது.. 

அண்ணா ஆட்சிக்காலத்தில்தான் பாரதியாரின் சிலை அமைக்கப்பட்டது என்றார். தமிழறிஞர்களையும் மொழிக்காவலர்களையும் பாதுகாக்கும் அரசு இது.. மேலும்

தலைவர்களின் சிலைகள் திறந்த வெளியில் இருப்பதால் தான் பொதுமக்கள் பார்வைக்கு எளிதாக இருக்கும்,மேலும் சிலைகள் சேதம் அடையாமல் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

.துறையின் சார்பில் 6 மண்டலாக பிரிக்கப்பட்டு இணை இயக்குனர்கள் கண்காணிப்பாளர்களாக நியக்கப்பட்டுள்ளார்கள்..

தை 1 மீண்டும் தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்குதமிழ்ப்புத்தாண்டு குறித்து முதலமைச்சர் இறுதி முடிவெடுப்பார் என்று அவர் கூறினார்

Tags:    

Similar News