14 வகை மளிகை பொருட்கள் நாளை முதல் விநியோகம்: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!

தமிழக ரேஷன் கடைகளில்14 வகையான மளிகை பொருட்கள் நாளை முதல் விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

Update: 2021-06-14 07:00 GMT

அமைச்சர் சக்ரபாணி

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சுமையை கருத்தில் கொண்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ கோதுமை மாவு, 1 கிலோ உப்பு, 1 கிலோ ரவை, அரை கிலோ சர்க்கரை, அரை கிலோ உளுந்தம்பருப்பு, கால் கிலோ புளி, கால் கிலோ கடலை பருப்பு, 200 கிராம் டீ தூள், 100 கிராம் கடுகு, 100 கிராம் சீரகம், 100 கிராம் மஞ்சள் தூள், 100 கிராம் மிளகாய் தூள், 1 குளியல் சோப் (125 கிராம்), 1 துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்) ஆகிய 14 வகை பொருட்கள் அடங்கிய கொரோனா சிறப்பு நிவாரண பொருட்களை அந்தந்த பகுதி ரேஷன் கடைகள் மூலமாக வழங்க அரசு திட்டமிட்டது. இதற்கான டோக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதன் கூட இரண்டாவது தவணையாக கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கவும் அரசு முடிவெடுத்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க தினமும் ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் 200 பேருக்கு இந்த நிவாரண பொருட்கள் மற்றும் தொகையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ரேஷன் கடைகளில் நாளை முதல் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கூறியுள்ளார். நாளை முதல் இந்த மாத இறுதிவரை பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையான ரூ.2000-த்தையும் நாளை முதல் பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News