தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை: தேர்தல் ஆணையம் அதிரடி

தேர்தல் முடிவுகள் வெளியானதும் வெற்றி பெறும் கட்சிகள், வெற்றி கொண்டாட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த தடை விதிப்பதாக, தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

Update: 2021-04-27 06:34 GMT

தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் இரண்டாம் தேதி எண்ணப்படுகிறது. இதற்கிடையே, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை, அதிவேகமாக பரவி வருகிறது. இதற்கு தேர்தல் பிரசாரமும் காரணம் என்று குற்றச்சாட்டு உள்ளது. 
தேர்தல் பேரணிகளில் அரசியல் கட்சிகள் கொரோனா விதிமுறைகளை மீறியதாகவும், அதை தடுக்கத் தவறிய தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினால் கூட தவறில்லை என்று,  சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான கருத்தை கூறியிருந்தது.

அதன் தொடர்ச்சியாக கொரோனா பரவலின் தற்போதைய நிலைக்கு தேர்தல் ஆணையம்தான் காரணம், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த நேரிடும் எனவும்  நீதிமன்றம் எச்சரித்திருந்தது.

தேர்தல் காலங்களில், கோவிட்-19 நெறிமுறையை மீறும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படத் தவறியது குறித்து தனது கவலைகளை தலைமை நீதிபதி பானர்ஜி தெரிவித்தார்.
இந்நிலையில், மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று,  தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருப்பதால் வெற்றி பெறும் கட்சிகள், வெற்றி கொண்டாட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News