புதிதாக அமையும் ஆவடி, தாம்பரம், காவல் ஆணையரக எல்லைகள் அறிவிப்பு

புதிதாக அமையவுள்ள ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரக எல்லைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-10 13:33 GMT

பைல் படம்

சென்னையை பிரித்து புதிதாக ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரக கூடுதல் டிஜிபிக்கள் எம்.ரவி மற்றும் சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டனர்.

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு சட்டம் ஒழுங்கு பிரிவுக்காக அம்பத்துார், மாதவரம், பூந்தமல்லி ஆகிய 3 காவல் துணை ஆணையர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், மாதவரம், புழல், எண்ணூர், பூந்தமல்லி, எஸ்ஆர்எம்சி ஆகிய 8 காவல் சரகங்கள் ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குள் வர உள்ளது.

 தாம்பரம் காவல் ஆணையர் எல்லைக்கு சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு குரோம்பேட்டை, பள்ளிக்கரணை, வண்டலூர் ஆகிய3 காவல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு 3 துணை ஆணையர்கள் நியமிக்கப்பட உள்ளனர். சங்கர் நகர், பல்லாவரம், குரோம்பேட்டை, சிட்லபாக்கம், சேலையூர், பீர்க்கங்கரணை, ஓட்டேரி, மணிமங்கலம், துரைப்பாக்கம், கண்ணகிநகர், செம்மஞ்சேரி, தாழம்பூர், கேளம்பாக்கம், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகள் இந்த எல்லைக்குள் வர உள்ளது.

புதிதாக அமையும் ஆவடி, தாம்பரம், காவல் ஆணையகரத்தில் இடம் பெறும் காவல் நிலையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை பெருநகர காவல் ஆணையகரத்தின் கீழ் 104 காவல் நிலையங்கள் இடம்பெற்றுள்ளது. ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் 25 காவல் நிலையங்கள் இடம் பெறுகிறது. தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் 20 காவல் நிலையங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News