ராஜீவ்காந்தி கொலைவழக்கை விசாரித்தவர் கொரோனாவுக்கு பலி!
ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.;
ரகோத்தமன்
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரை அடுத்த முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரியான ரகோத்தமன் (71). கடந்த 36 ஆண்டுகளாக சிபிஐ-யில் பணியாற்றி வந்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு மர்மம் விலகும் நேரம் என்ற நூலையும் அவர் எழுதியுள்ளார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அடுத்த முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி ரகோத்தமன் உயிரிழந்தார்.
,இதையடுத்து, ரகோத்தமனின் 2 மகள்கள் மற்றும் தம்பிகள் அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர். தற்போது உயிரிழந்த ரகோத்தமனின் உடலை மருத்துவமனையில் இருந்து சொந்த ஊரான உளுந்தூர்பேட்டையை அடுத்த பாண்டூர் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றனர்.