சென்னை மாநகராட்சி: திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று 19/06/2021 ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் வைத்து நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி . துணை ஆணையாளர் (பணிகள்) எம்.எஸ் பிரசாந்த் , துணை ஆணையாளர் (வருவாய்) விஷு மகாஜன், துணை ஆணையாளர் (சுகாதாரம்) நர்னாவாரே மணிஷ் சங்கர் ராவ், துணை ஆணையாளர் (கல்வி) திருமதி சினேகா, வட்டார துணை ஆணையாளர்கள் சிம்ரன்ஜீத் சிங் கலான், . சரண்யா தலைமைப் பொறியாளர்கள் மேற்பார்வையாளர்கள், மாநகர மாநகர நல அலுவலர், மாநகர மருத்துவ அலுவலர் மற்றும் உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.