குழந்தையை கடித்துக் குதறிய வெறிநாய்..!

பெண் குழந்தையை கடித்துக் குதறிய வெறிநாய். குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.;

Update: 2024-06-01 12:45 GMT

தெரு நாய் (கோப்பு படம்)

அம்பத்தூரில் இரண்டரை வயது பெண் குழந்தையை கடித்துக் குதறிய வெறிநாய்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. 

சென்னை அம்பத்தூர் ஏழாவது மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணாநகர், ஜீவன் பீமா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசிப்பவர் தங்கபாண்டி.  இவர் அண்ணா நகரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருடைய மனைவி பிரதீபா. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த திங்கள்கிழமை மாலை நான்கு முப்பது மணி அளவில் தங்கபாண்டியின் மகனும் மகள் யாஷிகாவும் வீட்டின்  வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக சாலையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த தெரு நாய்  சிறுமி மீது  சீறிப்பாய்ந்து கன்னத்தில்  ஒரு  கன்னத்தில் கடித்து குதறியது. அப்பொழுது அலறித்  துடித்த சிறுமியின் சத்தம் கேட்டு அவருடைய தாய் பிரதீபா நாயிடம் சுமார் 20 நிமிடம் போராடி குழந்தையை மீட்டு அருகில் இருந்த  குடியிருப்பு வாசிகளின் உதவியோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

குழந்தைக்கு கன்னத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார். இந்த சம்பவம் குடியிருப்பு பகுதியில் மிகப்பெரிய ஒரு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சாலையில் சுற்றித்  திரியக்கூடிய தெரு நாய்களை அம்பத்தூர் ஏழாவது மண்டல அதிகாரிகள் விரைந்து ஊழியர்களை வைத்து பிடித்து பொதுமக்கள் அச்சத்தை போக்க வேண்டும் என சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

Similar News