தூய்மை பணியாளர்களுக்கு நீதி கேட்டு காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்..!
கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான நீதி கேட்டு இடது தொழிற்சங்க மய்யம் சார்பில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் நடந்தது.;
கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான நீதி கேட்டு இடது தொழிற்சங்க மய்யம் சார்பில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் நடந்தது.
தொடர் போராட்டத்திற்கு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னை மாநகராட்சி, முதல்வர் இல்லம், சட்ட மன்றம் முற்றுகை என கைது போராட்டங்களில் ஈடுப்பட போவதாக உழைப்பாளர் உரிமை இயக்க மாநில தலைவர் கு பாரதி எச்சரிக்கை விடுத்தார்.
தூய்மை பணியாளர்களுக்கான நீதி கேட்டு இடது தொழிற்சங்க மய்யம் சார்பில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் அம்பத்தூரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் உண்ணாநிலை போராட்டத்தை உழைப்போர் உரிமை இயக்க மாநில தலைவர் வழக்கறிஞர் பாரதி துவக்கி வைத்தார்.
இதில் சென்னை மாநகராட்சி அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ட நாள் கூலி வழங்கவேண்டும் என்ற உயர்நீதி மன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும், தூய்மை மற்றும் சுகாதார பிரிவு உள்ளிட்ட பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு செயல்ப்படுத்த வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து பேசிய, உழைப்பாளர் உரிமை இயக்க மாநில தலைவர் வழக்கறிஞர் கு. பாரதி, சென்னை மாநகராட்சி மண்டலம்4, 5, 6, 7, 8ல் தனியாரிடம் ஒப்படைக்க முயற்சித்து வருவதாகவும், குறிப்பாக மண்டலம் 5, 6ல் தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.. மேலும் தற்போதைய முதல்வர் எதிர்கட்சி தலைவராக இருந்த போது சென்னை மாநகராட்சியில் பல ஆண்டுகளாக தூய்மை மற்றும் சுகாதார பிரிவு உள்ள பணியாளர்களை நிரந்தரப்படுத்தவும், தேர்தல் வாக்குறுதியாகவும் அளித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவும், உயர்நீதிமன்ற உத்தரவான அரசாணை எண் 62 படி குறைந்தப்பட்ச நாள் கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து தூய்மை பணியாளர்களின் உரிமை கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கவிட்டால் சென்னை மாநகராட்சி, முதல்வர் இல்லம், சட்ட மன்றம் முற்றுகை என கைது போராட்டங்களில் ஈடுப்பட போவதாக எச்சரிக்கை விடுத்துள்ள்னர்.