அதிமுக சார்பில் 1கோடி நிவாரணநிதி
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் - OPS & EPS அறிவிப்பு;
தமிழக அரசின் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும், நிவாரண பணிகளுக்காகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் தாங்கள் ஒரு மாத ஊதியமும் கொரோனா நிவாரண பணிகளுக்கென முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என அவர்கள் கூறியுள்ளனர்.