தமிழகத்தில் 8 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன்கள் இடமாற்றம்

தமிழகத்தில் 8 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன்களை இடமாற்றம் செய்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-05-17 12:21 GMT

ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் 8 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன்களை இடமாற்றம் செய்து, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், மருத்துவக் கல்வி இயக்குனரகத் தேர்வுக்குழு செயலராகப் பதவி வகிக்கும் சாந்திமலர் மாற்றப்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த வசந்தாமணி மாற்றப்பட்டு, மருத்துவக்கல்வி இயக்குனரகத் தேர்வுக்குழுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்குமணி மாற்றப்பட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மாற்றப்பட்டு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி முதல்வர் முருகேசன் மாற்றப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி மாற்றப்பட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை முதல்வர் சுகந்தி ராஜகுமாரி மாற்றப்பட்டு,விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருவாசகமணி மாற்றப்பட்டு, கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News