தீபாவளிக்கு வெளியூர் பயணம் செல்ல 28,000 பேர் முன்பதிவு
தீபாவளி பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூர் செல்ல 28 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தகவல்;
தீபாவளி பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூர் செல்ல 28 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் ஒரு மாதம் முன்பாக அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. முன்பதிவு தொடங்கிய ஒரே நாளில் சென்னையிலிருந்து வெளியூர் செல்ல 28ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.