பத்து ரூபாய் டாக்டர் என்று பெயர் பெற்று அந்த பகுதியில் போற்றப்படும் நபராக இருந்த சென்னை வண்ணாரப்பேட்டை சேர்ந்த டாக்டர் கோபால் என்பவர் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக தகவல்கள் வந்துள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள அனைவரும் டாக்டர் கோபால் மறைவுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பத்து ரூபாய் டாக்டர் கோபால் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சார்ந்த சமூக சேவை மருத்துவர் திரு. கோபால் அவர்கள் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். எவருக்கும் எளிதில் கிடைத்திடாத '10 ரூபாய் டாக்டர்' என்ற அடைமொழியை மருத்துவத்தை சேவையாகச் செய்து பெற்றவர்! பல்லாண்டுகள் பேசப்படும் அவரது புகழ்! ஆழ்ந்த அஞ்சலி என்று பதிவிட்டு இருந்தார்.