திருப்போரூரில் சோகம்: குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை-தாயும் தற்கொலை!
திருப்போரூர் அருகே கோவளத்தில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.;
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த கோவளம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவரது மனைவி வைதேகி (23) . இவர்களுக்கு யாஷிகா என்கிற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று வைதேகி தன் குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
திடீரென வைதேகி வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த மணிகண்டன், குழந்தையையும், வைதேகியையும் மீட்டு கேளம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வைதேகியை சென்னை அரசு மருந்துவமனையிலும், குழந்தையை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.