தாம்பரம்: ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் 19 சவரன் நகை, பணம் திருட்டு

தாம்பரம் அருகே, ஓய்வு பெற்ற அரசு ஊழியா் வீட்டில், 19 சவரன் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

Update: 2021-09-09 06:15 GMT

நகை, ரொக்கம் திருடு போன வீடு

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே வேங்கைவாசல் ஆதிநாத் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (69). இவர் சென்னை தலைமை செயலகத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி விஜயலட்சுமி (65). இருவரும் கொரொனா வைரஸ் காரணமாக, சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை, அந்த வீட்டை பெருக்கி சுத்தப்படுப்தும் பணிப்பெண் பாா்த்துவிட்டு கத்தசாமிக்கு தகவல் கொடுத்தாா். உடனே கந்தசாமி தனது உறவினருக்கு தகவல் கொடுத்தாா். அத்துடன்,  சேலையூா் போலீசுக்கும் புகாா் செய்தாா்.

அதன்பேரில் போலீசாா் சென்று, கந்தசாமி உறவினா் முன்னிலையில் ஆய்வு செய்தனா். பீரோவில் வைக்கப்பட்டிருந்த 19 சவரன் தங்க நகைகள், 40 ஆயிரம் ரொக்கப்பணம், வெள்ளிப் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்களை திருடு போயிருந்தன.  கைரேகை நிபுணா்கள் ரேகைகளை பதிவு செய்தனா். சேலையூா் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

கணவன், மனைவி இருவருமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், பூட்டியிருந்த வீட்டில் நகை திருடப்பட்டுள்ள சம்பவம், இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News