தடுப்பூசி தட்டுபாட்டை மத்திய அரசு இப்போதுதான் உணர்ந்துள்ளது: டி.ஆர்.பாலு எம்பி!
தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை மத்திய அரசு இப்போதுதான் உணர்ந்திருக்கிறது என்று டி.ஆர்.பாலு எம்பி தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனம் சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு நிமிடத்துக்கு 87 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய கூடிய நிலையத்தை ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய டி.ஆர்.பாலு : தடுப்பூசி தடுப்பாடு குறித்து மத்திய அமைச்சர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். தமிழகத்திற்கு தடுப்பூசி இறக்குமதிக்கோ, அல்லது உற்பத்திக்கோ, மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கான முகாந்திரம் இல்லை.
செங்கல்பட்டு அல்லது குன்னூரில் 113 ஆண்டு முன்னர் துவங்கபட்ட தடுப்பூசி தொழிற்சாலையில் தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசு அனுமதிதால் மாநில அரசு உற்பத்தியை துவங்கும். ஆனால் மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.
மத்திய அரசு தற்போதுதான் தடுப்பூசி தட்டுபாட்டை உண்ர்ந்திருக்கிறது, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, அதனால் தமிழகத்தில் போராட்டம் நடத்த வேண்டியதில்லை என்றார்.