பெட்டிக்கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

தா.பழூர் அருகே பிளாஸ்டிக் கப்புகளை விற்பனை செய்த 2 பெட்டிகடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.700 அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-07-23 06:16 GMT

தா.பழூரில் டாஸ்மாக் கடை அருகே உள்ள பெட்டிக்கடைகளில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தாசில்தார் சந்திரகாசன் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதித்தார்.

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் டாஸ்மாக் கடை அருகே உள்ள பெட்டிக்கடைகளில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தாசில்தார் சந்திரகாசன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்தார். மேலும் பிளாஸ்டிக் கப்புகளை விற்பனை செய்த 2 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.700 அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின்போது ஊராட்சி செயலாளர் இளங்கோவன் உடனிருந்தார்.


Tags:    

Similar News