பங்குனி உத்திரம்: முருகன் கோவில்களில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
அரியலூர் மாவட்டத்தில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில், பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றியுள்ள பகுதிகளான அஸ்தினாபுரம், வீ.கைகாட்டி, காஞ்சிலி கொட்டாய், வாணதிரையன்பட்டினம், சோழன்மாதேவி, சிலால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முருகனுக்கு சிறப்பு கோயில்கள் உள்ளன.
இதனையடுத்து பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வள்ளி தெய்வானையுடன் முருகன் அலங்காரத்தில் காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் வேண்டுதலை காணிக்கை செலுத்தும் விதமாக காவடி, பால்குடம், வாயில் அலகு, உடலில் அலகு, தேர் அலகு உள்ளிட்டவை எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.