ஜெயங்கொண்டம் அருகே மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மணல் குவாரி அமைக்க கோரி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த தொழிலாளருக்கு ரூ.25லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Update: 2021-09-04 07:57 GMT

தா.பழூரில் மணல் குவாரி அமைக்க கோரி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த தொழிலாளருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, தா.பழூரில் மணல் குவாரி அமைக்க கோரி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த தொழிலாளருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாஸ்கர் மணல் மாட்டு வண்டி ஓட்டி, அன்றாடம் வருமானம் பெற்று குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில்,  மாட்டு வண்டி மணல் குவாரிகள் மூடப்பட்டதால், தொழில் இல்லாமல் பாஸ்கர் மிகவும் வறுமையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அனுமதி இல்லாமல் மாட்டு வண்டியில் மணல் எடுத்து வந்ததாக கூறி, காவல்துறையினர் வண்டியை பறிமுதல் செய்தனர்.   நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், நீதிமன்ற உத்தரவுப்படி 5,000 அபராதம் கட்டினால், மாட்டு வண்டியை மீட்டு செல்லலாம் என போலீஸார் கூறியுள்ளனர்.

ஏற்கெனவே சரியான வேலையில்லாமல், வருமானம் இன்றி ஏழ்மை நிலையில் இருக்கும் போது, காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டியை மீட்க முடியாதது குறித்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் புலம்பிக் கொண்டு, சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான பாஸ்கர், உதயநத்தம் பேருந்து நிறுத்தத்தில் திடீரென தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.  இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த  பொதுமக்கள், உடனடியாக தண்ணீரை அவர் மீது ஊற்றி தீயை அணைத்தனர். ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனையில், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பாஸ்கர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மணல் குவாரி அமைக்க கோரி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த மாட்டுவண்டி தொழிலாளர் பாஸ்கர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரியும், குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரியும், தா.பழூரில் மாட்டுவண்டி தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags:    

Similar News