ஈரோடு மாவட்டத்தில் நாளை (29ம் தேதி) 20 ஆயிரம் கடைகள் அடைப்பு | Erode News Today
Erode News Today - மத்திய அரசின் வரி விதிப்பை ரத்து செய்யக்கோரி, ஈரோடு மாவட்டத்தில் நாளை (நவ.29ம் தேதி) 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்க உள்ளன.
மத்திய அரசின் வரி விதிப்பை ரத்து செய்யக்கோரி, ஈரோடு மாவட்டத்தில் நாளை (நவ.29ம் தேதி) 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்க உள்ளன | Erode News Today
இதுகுறித்து ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
வாடகை கட்டிடங்களில் இயங்கும் தொழிற்சாலைகள் 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்ற சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சிறு, குறு தொழில் கள் உள்ளிட்ட அனைத்து வகை தொழில்களும் பாதிக்கும். இந்த வரி உயர்வு என்பது கார்ப்பரேட் மயமாக்கும் சூழலை உருவாக்கும்.
மேலும் இது நம் நாட்டின் பாரம்பரிய கூட்டு குடும்ப தொழில் எனும் கட்டுமானத்தையே சிதைவுக்கு வழிவகுக்கும். எனவே இந்த வரி விதிப்பு முறையை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை (29ம் தேதி) வெள்ளிக்கிழமை அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல், கட்டுமானம் மற்றும் அனைத்து தொழில் வணிக நிறுவனங்களை சேர்ந்த 75 சங்கங்களும் இந்த ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
மஞ்சள் மார்கெட்டுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போராட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளும் மூடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.