8 லட்சம் வங்கி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்குமா? வரும் 20ம் தேதி சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பு!
Namakkal news- இந்தியாவில் 8 லட்சம் வங்கி பணியாளர்களுக்கு பென்சன் கிடைக்குமா என்பது வருகிற 20ம் தேதி வெளியாகும் சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பில் தெரிந்துவிடும்.
Namakkal news, Namakkal news today- இந்தியாவில் 8 லட்சம் வங்கி பணியாளர்களுக்கு பென்சன் கிடைக்குமா என்பது வருகிற 20ம் தேதி வெளியாகும் சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பில் தெரிந்துவிடும்.
மத்திய அரசும், பல மாநில அரசுகளும் கடந்த சில ஆண்டுகளாக, ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்தம் செய்துவிட்டு, தொகுப்பூதியமாக வழங்கி வருகிறது. ஓய்வுபெற்ற பின்னர் பணியாளர்களின் வாழ்வாதாரத்திற்காக மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க வேண்டும் என்று அரசு பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளிடம் போராடி வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள 8 லட்சம் பணியாளர்களுக்கு, ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று அகில இந்திய வங்கி ஓய்வு பெற்றோர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வங்கிகளில் பணியாளர்கள் பென்ஷன் கார்ப்பஸ் நிதியாக ரூ. 3 லட்சத்து 58 ஆயிரம் கோடி இருப்பில் உள்ளதால், வங்கி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில், நிதிக்கட்டுப்பாடு ஏற்படாது எனவே அனைத்து வங்கி பணியாளர்களுக்கும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கவேண்டும் என அவர்கள் கோரி வருகின்றனர். மேலும், சுமார் 8 லட்சம் வங்கி ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதிய புதுப்பிப்பை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
ஓய்வுபெற்ற மற்றும் ஓய்வு பெறும் வங்கி பணியாளர்கள் அனைவருக்கும், மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எம்.சி. சிங்லா என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில் வருகிற 20ம் தேதி சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பு வழங்க உள்ளது. நாடு முழுவதும் உள்ள வங்கிப் பணியாளர்கள் அனைவரும் இந்த தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த தீர்ப்பின் அடிப்படையில் 8 லட்சம் வங்கிப் பணியாளர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுமா என்பது தெரிந்துவிடும்.