ஸ்கிரீன் டைம் சிண்ட்ரோம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஸ்கிரீன் டைம் சிண்ட்ரோம் (Screen time Syndrome) பற்றி நீங்களும் தெரிந்து கொண்டு குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.

Update: 2024-10-22 03:30 GMT

டேப்லெட்டில் ஆழ்ந்து இருக்கும் சிறுவன் -கோப்பு படம் 

"அது என்ன ஸ்கிரீன் டைம் சிண்ட்ரோம்?’’. இன்றைக்கு உலகமே டிஜிட்டல் என்கிற மாயாபஜாருக்குள் நுழைந்து விட்டது. படிக்கும் மாணவ, மாணவியர் யூட்யூப், ஃபேஸ்புக், வெப் சீரிஸ், வீடியோ கேம்ஸ் என்று மணிக்கணக்கில் நேரத்தை வீணடிக்கிறார்கள். இதற்கு பெயர்தான் ஸ்கிரீன் டைம் சிண்ட்ரோம். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம்தான் மாணவ மாணவிகளுக்கு ஸ்கிரீன் டைம் இருக்கவேண்டும்.

அதிக ஸ்கிரீன் டைம் கண்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக கிட்டப்பார்வை, தூரத்தில் இருக்கிற பொருட்கள் மங்கலாக தெரிகிற blurred vision, வறட்சியான கண்கள், தலைவலி, தூக்கமின்மை, பள்ளிப் பாடங்களில் கவனமின்மை மாதிரியான பிரச்சினைகள் வரும். இதெல்லாம் ஆரம்ப நிலையில் இருக்கும் போது, கண் மருத்துவர்களை அணுகி சரிப்படுத்திக் கொள்ளலாம். குழந்தைகளின் ஸ்கிரீன் டைம் அதிகமாக அதிகமாக கண்களில் பார்வை சம்பந்தப்பட்ட பல கோளாறுகள் வர வாய்ப்பு அதிகம்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஸ்கிரீன் டைம் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்தால் மட்டுமே இளைய தலைமுறையினரை ஒளிபடைத்த கண்ணினாய் வா வா என்று சொல்லி பாட முடியும். எனவே குழந்தைகளுக்கு மொபைல் பற்றி தெளிவாக சொல்லிக் கொடுங்கள். நீங்களும் உங்கள் கண்களை பார்த்துக் கொள்ளுங்கள்.

Tags:    

Similar News