பெண்களுக்கு உடலில் ஹார்மோன் சமநிலை இல்லைன்னா என்ன நடக்கும்..?

பெண்களின் உடலில் ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டால் பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படலாம். அதனால் உணவு மூலமாகவே ஹார்மோன்களை சமநிலைப்படுத்தலாம்.

Update: 2024-11-01 12:18 GMT

ஹார்மோன் சமநிலை இல்லாமல் இருப்பதால் ஏற்படும் உணர்வுகள்-கோப்பு படம் 

இன்னிக்கு நாம் பெண்களின் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் உணவு வகைகள் குறித்து பார்க்கப்போகிறோம். பொதுவாக பெண்கள் உணர்ச்சிவயப்படக்கூடியவர்கள். அந்த உணர்ச்சிகளுக்கு ஏற்ப ஹார்மோன் சுரப்பும் மாறுபடும். அது பல பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும், உடலில் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக மாதவிடாய் காலம், கர்ப்ப காலம், குழந்தை பிறப்புக் காலம் மற்றும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டங்களில் அவர்களின் ஹார்மோன் அளவுகள் ஏற்ற இறக்கங்களை சந்திக்கின்றன.

இந்த ஹார்மோன் மாற்றங்களால் அவர்கள் அறியாமலேயே அவர்களுக்கு கோபம், அழுகை, பச்சாதாபம் என ஒரு கலவையான மனநிலைக்கு ஆளாவார்கள்.இது அவர்களின் இயல்பான வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும்.

சில சூழ்நிலைகளில் ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கிறது, சில சூழ்நிலைகளில் ஹார்மோன்களின் அளவு குறைகிறது. ஆனால் ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதும், குறைவதும் உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆகையால் உடலில் ஹார்மோன்கள் சமநிலையாக வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.

உடலில் ஹார்மோன்கள் சமநிலையற்று இருந்தால், அவற்றை சமநிலைக்கு கொண்டு வர சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நாம் உண்ணும் உணவின் மூலமாகவே ஹார்மோன் சுரப்புகளி சமநிலைப்படுத்திக் கொள்ளமுடியும்.

பெண்களின் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை நாம் தெரிஞ்சிக்கலாம் வாங்க. இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவுகள் ஹார்மோன் சுரப்பை சமநிலைப்படுத்தும். அதை அறிந்து பயன்பெறலாம் வாங்க.

பெண்களின் ஹார்மோன் சுரப்பை சமநிலைப்படுத்தும் உணவுகள் எவை?


ஆளிவிதை

ஆளி விதைகள் பொதுவான ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.இதில் வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆளி விதையில் உள்ள லிக்னன்ஸ்(Lignans) மற்றும் இரசாயன கலவைகள் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களாக செயல்படுகின்றன.

உடலில் ஹார்மோன்களின் அளவை சீராக்க, நீங்கள் ஆளிவிதையை பலவகை உணவுகளாக சாலடுகள் அல்லது வறுத்தும் சாப்பிடலாம். ஆளி விதையில் உள்ள ஊட்டச்சத்துகள் புற்றுநோய் தாக்கத்தின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.


உலர் பழங்கள்

ட்ரை புரூட்ஸ் எனப்படும் உலர் பழங்களில் நார்ச்சத்து, புரதம், மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.நமது உடலில் உள்ள ஹார்மோன்கள் சமநிலை இல்லாமல் இருந்தால், அன்றாட உணவில் உலர் பழங்களை சேர்த்து கொள்ளலாம். உலர் பழங்களிலும் அதிக அளவு பைட்டோ ஈஸ்ட்ரோஜன் உள்ளது.

உடலில் குறைந்த அளவு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனுள்ள பெண்கள், ஈஸ்ட்ரோஜன் அளவை சீராக்க உலர் பழங்களைச் சாப்பிடலாம். பாதாம், வால்நட், பேரீச்சம்பழம் அல்லது அத்தி போன்ற உலர் பழங்களை உட்கொள்ளலாம். குறிப்பாக காலை உணவுடன் எடுத்துக் கொள்வது நல்ல பலனைத்தரும்.


வெள்ளைப் பூண்டு

வெள்ளைப் பூண்டின் சுவை என்னவோ காரமாகத் தான் இருக்கும். ஆனால் பெண்களின் உடலில் ஹார்மோன்களைச் சமநிலையில் வைத்திருக்க, பெண்கள் தினசரி உணவில் பூண்டை சேர்த்துக்கொள்ளலாம்.

வெள்ளைப் பூண்டை உணவில் சேர்த்து சாப்பிடலாம். காலையில் வெறும் வயிற்றில் பூண்டு பற்களை மென்று கூட சாப்பிடலாம். அவ்வாறு பூண்டை உண்பதால் பெண்களின் மற்ற பிரச்சனைகளுக்கும் பூண்டு ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.


பீச் பழம் 

உடலில் ஹார்மோன் அளவு குறையும் போது பீச் சாப்பிடலாம். பீச் பழத்தில் பல வகையான வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் செறிந்து காணப்படுகின்றன. பீச்சில் உள்ள லிக்னன்ஸ் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களாக செயல்படுகின்றன.

பெண்கள் தங்கள் ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க, பீச் பழத்தை அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். பீச் சாப்பிடுவதன் மூலம் ஹார்மோன் சுரத்தலை சீராக்கலாம், மேலும் பீச் மற்ற உடல்நலப் பிரச்சினைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. பீச் சாப்பிடுவதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை பெருமளவு குறைக்கிறது.


நாவல் பழம்

நாம் பேச்சுவாக்கில் நவாப்பழம் என்று சொல்வோம். அதன் உண்மை பெயர் நாவல் ஆகும் நாவல் பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. பெண்கள் தங்கள் ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க நாவல் பழங்களை சாப்பிடலாம். மேலும் ஸ்ட்ராபெர்ரி, கிரான்பெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி வகைகளும் ஹார்மோன் சமநிலைக்கு சிறந்த பழங்களாகும்.

இது பைட்டோ ஈஸ்ட்ரோஜனாக செயல்படுகிறது. மேலும் உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவையும் அதிகரிக்கச் செய்கிறது.


டோஃபு(சோயா பாலில் செய்யப்பட்ட பன்னீர்)

டோஃபு புரதத்தின் சிறந்த மூலமாகும். பெண்கள் தங்கள் உடலில் ஹார்மோன் அளவை சமநிலையில் வைத்திருக்க டோஃபு சாப்பிடலாம். டோஃபு பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

ஆகையால் ஹார்மோன்கள் சமநிலையில் வைத்திருக்கும் பெண்களும் தவறாமல் டோஃபு உட்கொள்ளலாம். இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. 


சோயாபீன்ஸ்

சோயாபீன்சில் , புரதம் உட்பட பல வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உள்ளன. உங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு குறைவாக இருந்தால், சோயாபீன்ஸ்-ஐ நமது வழக்கமான உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

சோயாபீன்ஸ் சாப்பிடுவதால் தசை மற்றும் எலும்பு பலம்பெறும். மேலும் பெண்களுக்கு வலிமையும் ஆற்றலும் கிடைக்கும். உங்கள் உடலில் ஹார்மோன்கள் சமநிலை இல்லாமல் இருந்தால் நீங்கள் சோயாபீன்ஸ்களை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

Tags:    

Similar News