தினம் 1 கேரட்..! பச்சையாக சாப்பிட்டால் உங்க முகம் பளபளவென மாறிடும் தெரியுமா...? | Carrot benefits in tamil
கேரட்டின் நன்மைகள் குறித்து இந்த பதிவில் காண்போம், உடலில் வைட்டமின் ஏ குறைபாடு ஏற்பட்டால் அது கண் வறட்சியை ஏற்படுத்தி பார்க்கும் திறனை பாதிக்கும்.
கேரட் (Carrot) " மஞ்சள் முள்ளங்கி " என்று சொல்லுவாங்க. இது ஆரஞ்சு நிறத்தில் தான் இருக்கும். இது கிழங்கு வகையை சேரும்.மண்ணில் வளரும் , பெரும்பாலும் மலை பகுதியில் தான் அதிகம் வளரும்.
கேரட் | Carrot benefits in tamil
கண் பார்வையில் பிரச்சனை என்றால் இந்த கேரட்(Carrot) சாப்பிட்டால் சரி செய்யும்.இதை பச்சையாகவும், சமைத்தும் சாப்பிடலாம். கேரட்டில் (Carrot) நிறையா ரெஸிபி உள்ளது.இதை தொடர்ந்து சாப்பிட்டால் முகம் பொலிவாகும், உடல் அழகாகும்.கேரட்டில்(Carrot) நிறைய சத்துக்கள் உள்ளது. அதிகம் விரும்பி சாப்பிடும் காய் கேரட்(Carrot). அழகு சாதன பொருளாகவும் இருக்கு.இது பச்சையாக சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.தினமும் உணவில் அதிகம் சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியமாக(Carrot benefits in tamil) இருக்கும். பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.பல நாடுகளிலும் விளைச்சல் செய்கிறார்கள். கேரட்டில்(Carrot) அல்வா செய்து சாப்பிடுங்க அவ்வளவு சுவையாக இருக்கும். இதன் நன்மைகள்(Carrot benefits in tamil) இன்னும் சில காண்போம்.
கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Benefits of Eating Carrots
1. கண்களுக்கு நல்லது | (Good for the eyes)
உடலில் வைட்டமின் ஏ குறைபாடு ஏற்பட்டால் அது கண் வறட்சியை ஏற்படுத்தி பார்க்கும் திறனை பாதிக்கும். இந்த குறைபாடு முற்றிய நிலையில் மாலைக்கண் நோய் ஏற்படும். ஆனால் கேரட்டில் இந்த வைட்டமின் ஏ, லுடீன், ஜியாக்சாண்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை கண்களின் ஆரோக்கியத்தை(Good for the eyes) மேம்படுத்தும். எனவே கண் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாதெனில், தினமும் ஒரு கேரட்டை(Carrot) சாப்பிடுங்கள் போதும்.
2. எடை இழப்புக்கு உதவும் | (Helps with weight loss)
கேரட் (Carrot) ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிட ஏற்ற ஒரு அற்புதமான ஸ்நாக்ஸாகவும் இருக்கும். நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருந்தால், ஸ்நாக்ஸ் நேரத்தில் கண்டதை சாப்பிடாமல் கேரட்டை சாப்பிட்டால், உடல் எடை (Helps with weight loss) இன்னும் வேகமாக குறையும். ஏனெனில் கேரட்டில் உள்ள நார்ச்சத்து, நீண்ட நேரம் பசி ஏற்படாமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும்.
3.சரும ஆரோக்கியம் மேம்படும் | (Improves skin health)
நீங்கள் உங்கள் அழகை மேம்படுத்த விரும்புகிறீர்களா? அப்படியானால் அதற்கு மிகச்சிறந்த வழி தினமும் ஒரு கேரட்டை(Carrot) சாப்பிடுவது தான். ஆம், கேரட்டை தினமும் உட்கொண்டு வந்தால் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் கரோட்டீன் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுத்து சருமத்தின்(Improves skin health) ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
4. நோயெதிர்ப்பு சக்தி மேம்படும் | (Boosts immunity)
கேரட்டில்(Carrot) வைட்டமின் சி அதிகமாக உள்ளன. நோயெதிர்ப்பு மண்டலம்(Boosts immunity) வலுவாக இருக்க வேண்டுமானால் வைட்டமின் சி உடலில் வளமான அளவில் இருக்க வேண்டும். கேரட்டை உட்கொள்வதன் மூலம் அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்றவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக் கொள்ளும்.
5. இதய ஆரோக்கியம் மேம்படும் | (Improves heart health)
கேரட்(Carrot) போன்ற வண்ணமயமான காய்கறிகளை எடையைக் குறைக்க முயற்சிக்கும் போது உட்கொண்டு வந்தால் அது எடையைக் குறைக்க உதவுவதோடு கரோனரி இதய நோயின் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கேரட்டில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே இதய ஆரோக்கியம்(Improves heart health) சிறப்பாக இருக்க வேண்டுமானால் தினமும் ஒரு கேரட்டை(Carrot) சாப்பிடுங்கள்.
6.செரிமான மண்டலத்திற்கு நல்லது | (Good for the digestive system)
கேரட்டில் (Carrot) நார்ச்சத்து மற்றும் கரோட்டினாய்டுகள் அதிகளவில் உள்ளன. இவை இரண்டுமே செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத சத்துக்களாகும். கேரட்டை தினமும் உட்கொண்டு வந்தால் இதில் உள்ள கரோட்டினாய்டுகள் குடல் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். ஆகவே செரிமான பிரச்சனைகளைத் தடுத்து, செரிமான மண்டலத்தின்(Good for the digestive system) ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், கேரட்டை (Carrot) சாப்பிடுங்கள்.
7. எலும்புகளுக்கு நல்லது | (Good for bones)
கேரட்டில் (Carrot) கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிக அளவில் இல்லாவிட்டாலும், ஒரு குறிப்பிட்ட அளவில் உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாதவை. ஆகவே கேரட்டை(Carrot) தினசரி உட்கொண்டு வருவதன் மூலம், எலும்புகளை(Good for bones) ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
8. சர்க்கரை நோய்க்கு நல்லது | (Good for diabetes)
கேரட்டில்(Carrot) கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவு. எனவே சர்க்கரை நோயாளிகள் கேரட்டை(Carrot) தங்களின் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். முக்கியமாக கேரட்டில் சர்க்கரை குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் டைப்-2 சர்க்கரை நோயைத் தடுக்க உதவி புரியும். ஒருவேளை ஏற்கனவே சர்க்கரை நோய்(Good for diabetes) இருந்தால் கேரட்டை உட்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.