மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை.
மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.;
நீலாங்கரை பகுதியில் உள்ள மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை. இந்த சோதனைகள் இன்னும் அதிகரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் தற்போது சபரீசன் நண்பர் என்று கூறப்படும் ஜீஸ்கொயர் பாலா தொடர்புடைய வீடுகளிலும் சோதனை தொடர்வதாக செய்திகள் கூறுகின்றன. வருமான வரித்துறை சோதனை தொடர்வதால் அப்பகுதியில் திமுக முக்கிய நிர்வாகிகளான ஆர்.எஸ். பாரதி மற்றும் மா.சுப்பிரமணி ஆகியோரும் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். சோதனை குறித்த தகவல்கள் பரவி வருவதால், திமுக தொண்டர்கள் ஏராளமாக குவிய தொடங்கியுள்ளனர்.
திடீர் போராட்டம் ஏற்படலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பை அதிகப் படுத்தியுள்ளனர்.