ரோஸ் ஆப்பிள் கேள்விப்பட்டு இருக்கீங்களா..? சர்க்கரை நோய்க்கு சிறந்ததுங்க..!

Water Apple Tamil Name-பழங்கள் என்றாலே பல சத்துக்களை உள்ளடக்கி இருப்பதுடன் உடல் ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Update: 2022-12-23 08:45 GMT

Water Apple Tamil Name

Water Apple Tamil Name

வெளிநாடுகளில் பெரும்பாலானோர் சாப்பிட்டு வரும் இந்த ரோஜா ஆப்பிள் பழம் பற்றி நம்மில் பலருக்குத் தெரியாது. சாதாரணமாக நம் நாட்டில் குளிர்பிரதேசங்களிலும் இது காணப்படுகிறது. மலை பிரதேசத்தில் வாழ்பவர்களுக்கு இது தெரியும் என்றாலும் பெரிய அளவில் இதன் பயன்கள் தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

பல பெயர்கள்

தற்போது சாதாரணமாக சமவெளிப்பகுதிகளிலும் இந்த ரோஸ் ஆப்பிள் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த பழமானது, கோயில் மணி வடிவத்தில் (கூம்பு) ரோஸ் நிறத்தில் இருக்கும். இதற்கு தண்ணீர் ஆப்பிள், பன்னீர் பழம், பன்னீர் ஆப்பிள் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இதனை ஜாம் பழம் என்று அழைக்கின்றனர். இந்த பழம் சுவையில் மட்டும் சிறந்தது என்று எண்ணிவிடாதீர்கள். மருத்துவ பயன்களிலும் இது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

ஏனென்றால், இதில் அடங்கியுள்ள சத்துக்கள் அப்படி. ஓகே வாங்க இப்போது ரோஜா ஆப்பிளின் மருத்துவ குணங்களைப் பற்றி விரிவாக பார்ப்போம். இதை படித்துவிட்டீர்கள் என்றால் இந்த பழத்தை வாங்கி சாப்பிடாமல் இருக்கமாட்டீர்கள்.

சர்க்கரை நோய்க்கு

நீரிழிவு நோய், புற்றுநோய் தடுப்பு, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, செரிமான பிரச்னைகள், வலிப்புத்தாக்கங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பிரச்னைகளை தீர்ப்பதில் இந்த ரோஸ் ஆப்பிள் பழம் உதவுகிறது. பாரம்பரிய மருந்துகளிலும் இந்த பழம் பயன்படுத்தப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.

ஒவ்வொரு பழத்திலும், நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடிய எண்ணற்ற வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அந்த வகையில் ரோஸ் ஆப்பிளில் என்னென்ன ஊட்டச் சத்துக்கள் அடங்கியுள்ளன என்று பார்ப்போம்.

  • வைட்டமின் சி மற்றும் ஏ
  • நியாசின்
  • கால்சியம்
  • பொட்டாசியம்
  • மெக்னீசியம்
  • பாஸ்பரஸ்
  • புரதம்
  • நார்ச்சத்து

ஏற்கனவே கூறியது போல, இந்த பழம் எண்ணற்ற மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, நாட்டு மருத்துவத்தில் இந்த ரோஸ் ஆப்பிள் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  • மலேசியாவில் த்ரஷ் சிகிச்சைக்கு ரோஜா ஆப்பிள் மரத்தின் பட்டையை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகை காபி பயன்படுத்தப்படுகிறது.
  • இதன் சாறு மூளை மற்றும் கல்லீரல் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வினை பெற உதவுகிறது.
  • ரோஜா ஆப்பிளின் பூக்கள் காய்ச்சலை விரட்ட உதவுகின்றன.
  • அதன் இலைகளில் கண்களில் வரும் புண் மற்றும் வாத நோய்க்கு சிகிச்சையளிக்க உதவக்கூடிய டையூரிடிக் மற்றும் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன.
  • ரோஸ் ஆப்பிள் பழத்தின் விதைகள் வயிற்றுப்போக்கை சரிசெய்ய உதவுகிறது.
  • கியூபாவின் பூர்வீகத்தில், ரோஸ் ஆப்பிள் வேரை கால்-கை வலிப்பு பிரச்னை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • கொலம்பிய மக்கள் ரோஜா ஆப்பிள் விதைகளை வலி நிவாரணியாக பயன்படுத்துகின்றனர்.

ரோஜா ஆப்பிள்களில் ஒரு ஆல்கலாய்டு 'ஜம்போசின்'உள்ளது. இது ஸ்டார்ச் வழிமுறையை சர்க்கரையாக மாற்றிடும். நாவல் பழத்தைப் போலவே, நீரிழிவு நோயாளிகளும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த இந்த பழத்தை சாப்பிடலாம். ரோஜா ஆப்பிளில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளதால், அது கொழுப்புச்சத்துக்களை சீராக்க உதவுகிறது. இதன் மூலம், இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படுகிறது. அதாவது, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படாது.

இந்த ரோஸ் ஆப்பிள் சிவப்பு, இளம் பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றன. தற்போது இந்த ரோஸ் ஆப்பிள் பற்றிய விழிப்புணர்வு பலருக்கு தெரியவந்துள்ளதால் தமிழகம் முழுவதும் பரவலாக கிடைக்கின்றன.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News