தினம் ஒரு மூலிகையில் அகத்தி : மாலைக்கண் குறைபாட்டுக்கு சூப்பர் மருந்து

அகத்தியின் பயன்கள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள்.

Update: 2021-12-17 05:45 GMT

அகத்தி கீரை மற்றும் பூ.

புழு தொல்லை: 

அகத்தி இலை சாற்றை 10-20 மிலி அளவுக்கு அதிகாலையில் வெறும் வயிற்றில், 2 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் குடலில் உள்ள புழுக்கள் வெளியேறும்.

தலைவலி:

அகத்தி இலைச்சாற்றை காலை நேரத்தில் 2 -3 சொட்டு மூக்கில் ஊற்றி வந்தால் சைனசிடிஸ் மற்றும் தலைவலி போன்ற பிரச்னைகளும் குணமாகும்.

காய்ச்சல்:

அகத்தி இலைகளை விழுதாக அரைத்து உடலின் மேல்புறமாக பத்து போல பூசினால் காய்ச்சல் குறையும்.

மாலைக்கண் :

அகத்தி இலை, 3 கிராம் அளவில் அகத்தி பூ ஆகியவற்றுடன் சேர்த்து விழுதாக அரைத்து சுத்தமான நெய்யில் பதப்படுத்தப்படுகிறது. இது மாலைக்கண் நோய்க்கு நல்ல மருந்தாகிறது.

கோழை:

5 கிராம் அகத்திப்பட்டைத் தூள், 100 மில்லி அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்கப்படுகிறது. அது 25 மில்லியாக குறையும் வரை நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். காப்பி போன்று இதை குடித்தால் கோழை குறையும். பெருங்குடல் சுத்தமாகும்.

அகத்தி மரம் 

கீல்வாதம்:

அகத்தி வேர் மற்றும் பட்டையை விழுதாக அரைத்து பூசினால் கீழ்வாத வலி மற்றும் வீக்கம் குறையும்.

சத்துக்கள் :

அகத்திக்கீரையில் 8.4 சதம் புரதம், 1.4 சதம் கொழுப்பு, 3.1 சதம் தாது உப்புகளும் இருப்பதாகக் தெரிகிறது. மேலும் அகத்திக்கீரையில் மாவுச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ போன்றவையும் அடங்கியுள்ளன. 

தொண்டை புண், தொண்டை வலி உள்ளவர்கள் அகத்திக்கீரையை பச்சையாக மென்று சாப்பிட்டால் தொண்டை பிரச்சனைகள் குணமாகும்.

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறை அகத்தி கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்த அழுத்தம் குறையும். குடல் புண் பிரச்சனையை சரி செய்ய அகத்திக்கீரை உன்னதமான மருந்து. மதிய வேளையில் இதை சாப்பிட்டு வந்தால் அல்சர் மற்றும் உடலில் உள்ள பித்தம் குறையும்.

அகத்தியில் வெள்ளை பூ.

அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறையும். கண்கள் குளிர்ச்சியாகும். நீரடைப்பு, பித்த மயக்கம் குணமாகும். சிறுநீர் தடையில்லாமல் போகும். அகத்திக் கீரையை வெயிலில் காய வைத்து பொடியாக்கி பாலில் கலந்து குடித்தால் மார்பில் ஏற்படும் வலி முற்றிலுமாக குறையும். அகத்திக் கீரையை தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும். பார்வை தெளிவாகும்.

Tags:    

Similar News