urine infection symptoms in tamil-யூரின் இன்பெக்க்ஷன் வந்தால் என்னென்ன அறிகுறிகள் காட்டும்..? தெரிஞ்சுக்கங்க..!

urine infection symptoms in tamil-சிறுநீர்த்தொற்று என்பது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் பாதிப்பாகும். உடனடி சிகிச்சை பாதுகாப்பளிக்கும்.

Update: 2023-01-03 07:28 GMT

urine infection symptoms in tamil-உடலில் ஏற்படும் பிரச்னைகள் என்பது வெறும் உடலோடு நின்றுவிடுவதில்லை. அது மனதை பெரிதும் பாதிக்கிறது. வழக்கமான பணிகளை செய்யமுடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. இயல்பு நிலைக்குத் திரும்பும்வரை போராட்டமாகத்தான் இருக்கும்.


சில உடற்பிரச்னைகளில் ஆண் மற்றும் பெண்களுக்கு வேறுவேறு விதமான அறிகுறிகளைக்காட்டும். ஆண் மற்றும் பெண்களுக்கு பொதுவாக ஏற்படக்கூடிய பாதிப்புக்களில் சிறுநீர்த்தொற்றும் ஒன்றாகும். ஆனால், சிறுநீர்த்தொற்று பெண்களுக்கு மிக இலகுவாக ஏற்படும். அதனால் பெண்கள் மிக கவனமாக இருக்கவேண்டும். சிறுநீர் தொற்றை சாதாரணமாக அலட்சியப்படுத்திவிட முடியாது. சிறுநீர்த் தொற்று பல இன்னல்களை ஏற்படுத்திவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சிறுநீர் தொற்றுக்கான அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

காரணமே இல்லாமல் அடிக்கடி சிறுநீர் கழித்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சில சமயங்களில் இவை ஆபத்தான நிலையை ஏற்படுத்தலாம். இது போன்ற அறிகுறி இருந்தால் நிச்சயம் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுதல் அவசியம்.

வலியுடன் சிறுநீர் பிரிதல்

சிறுநீர் கழிக்கும் போது பிறப்பு உறுப்பில் வலி அல்லது எரிச்சல் போன்று ஏற்பட்டால் அவை சிறுநீர்ப்பை தொற்றுகளுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். இவை சில சமயங்களில் பெண்களுக்கு கருப்பையிலும் வலியை உண்டாக்கலாம். ஆகவே மருத்துவ சிகிச்சை அவசியம். அதனால் மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும்.


urine infection symptoms in tamil

சிறுநீரில் துர்நாற்றம் வீசுதல்

சிறுநீர் கழிக்கும் போது ஒருவித துர்நாற்றம் ஏற்பட்டால் அலட்சியப்படுத்தக் கூடாது. சிறுநீர்ப்பையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் மட்டுமே இதைப்போன்ற துர்நாற்றம் வீசும். மேலும் இவை பாக்டீரியாக்களினால் ஏற்பட கூடிய தொற்றாகவும் இருக்கலாம். ஆகவே, இந்த நிலை ஏற்பட்டால் உடனே மருத்துவரின் ஆலோசனைப்பெற்று சிகிச்சை பெறுவது அவசியம் ஆகும்.

பசியின்மை ஏற்படுதல்

நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தும் பசி இல்லையென்றால் அது வேறு ஏதோ பிரச்னைக்கான எச்சரிக்கை அபாய மணியாகக் கூட இருக்கலாம். இந்த சூழலில் ஏற்பட்டுள்ள பிரச்னையை சரியாக கையாள வேண்டும். மேலும், நீர்ச்சத்து நிறைந்த உணவுப்பொருட்களை உட்கொள்வது பாதிப்பைக் குறைக்கும்.

வயிற்று உப்பிசம் ஏற்படுதல்

எதை சாப்பிட்டாலும் வயிறு காற்றடைத்த பைபோல உப்பிசமாக இருக்கிறதா? அல்லது மலச்சிக்கல் உள்ளதா? இது கூட சிறுநீர்ப்பை தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம். இவ்வாறு இருக்கும் போது சற்று ஜாக்கிரதையாக மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்வது பாதுகாப்பானதாகும். மருத்துவரை சந்தித்து ஆலோசனைப்பெற்று சிகிச்சை பெறுவது அவசியம் ஆகும்.


காய்ச்சல் ஏற்படுதல்

சிறுநீர்ப்பையில் தொற்று ஏற்பட்டிருந்தால் காய்ச்சல் வடிவிலும் நமக்கு எச்சரிக்கைத் தெரிவிக்கும். இது சாதாரண காய்ச்சலாக இருக்காது. மாறாக உடலின் முழு தட்பவெப்பமும் குறைந்து குளிர் காய்ச்சலாக வெளிப்படும். இது போன்று காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை பார்த்து ஆலோசனைப்பெற்று சிகிச்சை பெறுவது கட்டாயமாகும்.

urine infection symptoms in tamil

சிறுநீர் நிறம் மாறுதல்

சிறுநீர் நுரை போன்று வந்தாலோ அல்லது சிறுநீரில் இரத்தம் வந்தாலோ அதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இது மிக மோசமான பாதிப்பை உண்டாக்கி விடும். கூடவே வேறு சில உடல் உபாதைகளையும் ஏற்படுத்திவிடும். இதற்கும் உடனடி மருத்துவ சிகிச்சைத் தேவை.


முதுகு வலி

பின்புற முதுகில் வலி இருந்தாலோ அல்லது வயிற்றில் வலி ஏற்பட்டாலோ கூட சிறுநீர் பாதையில் ஏற்பட்ட பாதிப்பால் வரும் வலியாக இருக்கலாம். மேலும், இது போன்ற வலிகளை சாதாரணமாக எண்ணிவிடாமல் உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவதே பாதுகாப்பானது.

Tags:    

Similar News