tofu in tamil-சோயா பன்னீர் சாப்பிடுங்க..! சோக்கான வாழ்க்கை வாழுங்க..!

tofu in tamil-சோயாவின் பல நல்ல பலன்களை பலரும் இன்னும் அறியாமல் இருப்பது ஆச்சர்யத்தை நமக்கு ஏற்படுத்தாமல் இல்லை.;

Update: 2023-02-08 10:34 GMT

tofu in tamil-சோயா பன்னீர் (கோப்பு படம்)

tofu in tamil-டோஃபு என்பது பீன்ஸ் வகைகளில் ஒன்றான சோயாவின் உணவு ஆகும். சோயாவில் புரதம் கொட்டிக்கிடக்கிறது. குறைவான விலையில் நிறைவான புரத உணவுகளில் ஒன்றான இந்த சோயா குறித்து பல்வேறு விதமான தகவல்கள் பரவினாலும் கூட அதில் உள்ள புரதச் சத்திற்காக அது பயன்படுத்தப்பட்டே வருகிறது.


டோஃபு (Tofu) என்பது சோயா விதையின் பாலிலிருந்து தயாரிக்கப்படும் தயிர் போன்ற ஒரு கெட்டிப்பொருள் ஆகும். அது பன்னீர் போன்றது. இந்த சோயா தயிரில் இரும்புச் சத்துள்ளது. இந்த இரும்புச் சத்து இரத்தத்தில் அதிகம் சேர்வதால் ஹீமோகுளோபின் அதிகரிக்க துணைசெய்கிறது. இது ஆக்சிஜனை உடல் முழுவதும் எடுத்துச்செல்ல பெரிதும் உதவுகிறது. இதன் காரணமாக உடல் அதிக ஆற்றலைப் பெறுகிறது.

அரை கப் சோயாவில் 10 கிராம் புரதம் உள்ளது ஆச்சர்ய உண்மை. 10 கிராம் புரதத்திலிருந்து 88 கலோரிகள் கிடைக்கிறது என்பது அடுத்த ஆச்சரியம். இது மாமிச உணவை விட 45 கலோரிகள் மட்டுமே குறைவானது என்பதால்,சோயாவை ஆரோக்யமான உணவு என்பதில் சிறிதும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. சோயாவில் துத்தநாகம், இரும்பு, செலினியம், பொட்டாசியம் மற்றும் பல விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.

tofu in tamil

ஆரோக்ய நன்மைகள்

கெட்ட கொழுப்பு குறைய

சோயாவில் பல்வேறு சத்துக்கள் இருந்தாலும், அது உடலுக்கு நன்மை தரும் விஷயங்களையும் கொண்டுள்ளது. மோசமான கொழுப்பைக் குறைப்பது சோயாவின் முதன்மையான நன்மை எனலாம். மாமிச உணவுகளுக்கு மாற்றாக சோயாவை சேர்த்துக் கொண்டால், ட்ரைகிளைசெரைட்ஸ் மற்றும் மோசமான கொழுப்பின் அளவை வெகுவாக குறைத்துவிடும். மேலும் எலும்புகளை வலுவடைச் செய்து வயதாவதை தள்ளிப்போடுகிறது.


மார்பக புற்றுக்கு

சோயாவை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், மார்பகப் புற்றுநோய், இதயக் கோளாறுகள் (Cardiovascular Diseases) மற்றும் எலும்பு புரை (Osteoporosis) ஆகியவற்றை தடுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க அளவிலான சோயா சாப்பிட்டால், பெண்களின் முதுகெலும்பு வலுப்பெறும். இது போன்ற நன்மைகளால், சோயா ஆரோக்கியமான உணவாகவே உள்ளது.

நீரிழிவு குறைபாடு குறையும் 

டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாளடைவில் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் சிறுநீரில் அதிக அளவு புரதம் வெளியேறும். ஆய்வுகளின்படி சர்க்கரை நோயாளிகள் சோயா எடுத்துக் கொண்டால் சிறுநீரில் வெளியேறும் புரதத்தின் அளவு குறையும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

tofu in tamil

எடை குறைய

உடல் எடை குறைப்பதற்கு அல்லது மேலாண்மை செய்வதற்கு சோயா பெரிதும் உதவியாக இருக்கிறது. சோயாவை பயன்படுத்துவதால் உடல் பருமனை தடுத்து, ஆரோக்யமான எடையை பராமரிக்க உதவுகிறது.


எலும்புகள் பலமாகும்

சோயா சாப்பிடுவதன் மூலமாக எலும்பு தேய்மானம் தடுக்கப்படும். எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து உறுதியாக்கும்.

உணவிற்கு அற்புதமான நிறத்தையும் மற்றும் பல்வேறு ஆரோக்ய நன்மைகளையும் தரும் சோயாவை சாப்பிடுவதில் தயக்கம் வேண்டாம். எந்த உணவில்தான் எதிர்க்கருத்து இல்லை? ஆனால் சிறந்த விஷயங்களை தேர்ந்தெடுக்க விரும்பினால், சோயாவில் உள்ள புரதத்தை கருத்தில் கொள்ளுங்கள். ஆரோக்யமான உணவை உண்டு ஆரோக்யமாக வாழ்வோம்.

Tags:    

Similar News