Throat Pain Home Remedies in Tamil-தொண்டை வலிக்கு எளிய வீட்டு வைத்தியம்..!

தொண்டை வலி ஏற்படும்போது நாம் உணவு உண்ணுவது அல்லது தண்ணீர் குடிப்பது போன்றவைகளை இலகுவாக செய்யமுடியாது. அது வலியை ஏற்படுத்தும்.

Update: 2023-12-01 11:25 GMT

Throat Pain Home Remedies in Tamil

குளிர்காலம் துவங்கிவிட்டதால், சளி, இருமல், தொண்டைவலி, காய்ச்சல் போன்ற பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. காலையில் எழுந்தவுடன் தொண்டை பகுதியில் ஒரு வினோதமான வலி காரணமாக பலர் சிரமப்படுகிறார்கள். தொண்டை புண் பிரச்னையில் இருந்து நிவாரணம் பெற, மக்கள் மருந்துகளை உட்கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.


Throat Pain Home Remedies in Tamil

பலர் வீட்டு வைத்திய முறையை தேடுகிறார்கள். இன்னும் சிலர் கசாயம் செய்து குடிக்கத் தொடங்குகிறார்கள் அல்லது பிற வீட்டு வைத்தியங்களை பின்பற்றுகிறார்கள். தொண்டைப்புண் பிரச்னையால் சிரமப்படுபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், ஆயுர்வேத மருத்துவர் தீக்ஷா பவ்சர் சவலியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில வீட்டு மற்றும் எளிதான வைத்தியங்களைப் பகிர்ந்துள்ளார். அவை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


தொண்டை வழியில் இருந்து நிவாரணம் பெற

மஞ்சள்-உப்பு நீர்

ஒரு கிளாஸில் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் மற்றும் அரை டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்றாக கொதிக்க வைக்கவும். பின் சிறிது ஆறவைத்து இந்த நீரால் வாய் கொப்பளிக்கவும். இந்த தண்ணீரை ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை வாய் கொப்பளிக்கலாம். இது தொண்டை வலியிலிருந்து விடுபடுவதோடு உங்கள் தொண்டைக்கு நிவாரணம் அளிக்கும்.

அதிமதுரம்

தொண்டை வலிக்கு அதிமதுரம் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஒரு டீஸ்பூன் அதிமதுரம் பொடியை ஒரு டீஸ்பூன் தேனுடன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டால் போதும்.

Throat Pain Home Remedies in Tamil


நெல்லிக்காய்

தொண்டை புண் அல்லது சளியை நீக்க ஆம்லா உட்கொள்ளலாம். நெல்லிக்காய் (முழு நெல்லிக்காய்) சாறு எடுத்து அதில் 1 ஸ்பூன் தேன் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குடிக்கவும்.

வெந்தய நீர்

தொண்டை வலிக்கு வெந்தய நீர் மிகவும் நல்லது. வெந்தயத்தில் தொண்டையை சுத்தப்படுத்த உதவும் இயற்கை சேர்மங்கள் உள்ளன. 1 டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்து, வடிகட்டி டீ போல குடிக்க வேண்டும்.


இலவங்கப்பட்டை

குளிர்காலத்தில் இலவங்கப்பட்டை சாப்பிடுவது சளி, இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும். அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் அல்லது ஒரு சிறிய இலவங்கப்பட்டையை ஒரு கிளாஸ் தண்ணீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்து, வடிகட்டி ஆறவைத்து, சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து குடிக்கவும்.

Throat Pain Home Remedies in Tamil


துளசி இலை

குளிர்காலத்தில் தொண்டை வலியில் இருந்து நிவாரணம் பெற, 4 முதல் 5 துளசி இலைகளை சிறிது தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும். நீங்கள் விரும்பினால், தேன் கூட சேர்க்கலாம்.

சுக்கு பொடி

தொண்டை வலியிலிருந்து நிவாரணம் பெற, இரவில் தூங்கும் முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் அரை டீஸ்பூன் சுக்கு பொடியை கலந்து குடிக்கலாம்.

Throat Pain Home Remedies in Tamil

இஞ்சி

தொண்டை புண் குணமாக இஞ்சியை சாப்பிடலாம். ஒரு அங்குல புதிய இஞ்சியை 1 கப் தண்ணீரில் 3-4 நிமிடங்கள் கொதிக்க வைத்து, வடிகட்டி, பிறகு அதிகமாக குடிக்கவும்.


வெந்நீர் மற்றும் எலுமிச்சை

தொண்டை புண் பிரச்சனையை குணப்படுத்த, அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் எலுமிச்சை மற்றும் சிறிது தேன் கலந்து குடித்தால் போதும்.

Throat Pain Home Remedies in Tamil

வெந்நீர்

தொண்டை வலி ஏற்பட்டால், நாள் முழுவதும் வெந்நீரையும் குடிக்கலாம். வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது தொண்டைக்கு இதமளிக்கிறது மற்றும் தொண்டை வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

Tags:    

Similar News