மார்பகப் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? தெரிஞ்சுக்கங்க..!
சமீப காலமாகவே உலகம் முழுவதும் மார்பக புற்றுநோயால் அவதிப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.;
symptoms of warning breast cancer in tamil, breast cancer, breast cancer treatment, Breast cancer precautions
இன்று கூட துணை நடிகை சிந்து என்பவர் மார்பகப் புற்று நோயால் இறந்துவிட்டார் என்ற செய்தியை நாம் கவனிக்க வேண்டும்.
மார்பக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிவது, பெண்கள் தங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க உதவுகிறது. சில அறிகுறிகளைக் கண்டால் விழிப்புடன் இருக்க வேண்டும். முதன்மையான சில ஆரம்ப அறிகுறிகள் கீழே தரப்பட்டுள்ளன:
மார்பக புற்றுநோயானது பெண்களிடையே அதிகமாக பரவி வரும் கவலைதரும் பாதிப்பாக உள்ளது. இது ஆரம்ப காலத்திலேயே கண்டறியப்பட்டு பயனுள்ள சிகிச்சை பெற்றுவிட்டால் முற்றிலும் குணமாக்கிவிட முடியும்.
தொடக்கத்திலேயே கண்டறிவது பெண்களின் ஆரோக்யமான வாழ்க்கைக்கு உதவுகிறது. ஏனெனில் மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் அதன் சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்க ஏதுவாகிறது.
இன்னொரு முக்கிய உண்மை என்னவென்றால், இது ஆண்களையும் பாதிக்கும். இருப்பினும் இது மிகவும் அரிதானது. ஆண்களில் மார்பக புற்றுநோய் 1சதவீதத்துக்கும் குறைவான அளவிலேயே ஆண்களை பாதிக்கிறது. அதனால் ஆண்களும் மார்பக புற்று நோய் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
விழிப்புடன் இருக்க வேண்டிய முதன்மையான அறிகுறி மார்பகக் கட்டி தான். அதனால் பெண்கள் அடிக்கடி மார்பகங்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளவேண்டும். கைகளால் தொட்டு அல்லது அழுத்தி,மார்பகங்களில் ஏற்படும் வழக்கத்திற்கு மாறான எடை அல்லது மார்பக திசுக்களில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளதா என்பதை அறிய வேண்டும்.
கூடுதலாக, மார்பக வடிவம் அல்லது அளவில் மாற்றங்கள், சமச்சீரற்ற தன்மை அல்லது வீக்கம் உட்பட, புறக்கணிக்கப்படக்கூடாத எதுவாக இருந்தாலும் அது மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
மார்பக தோல் மீது மாற்றங்கள், அதாவது சிவந்து இருத்தல், தடித்தல், மங்குதல் அல்லது குத்துதல் போன்றவைகள் உள்ளனவா என்று கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும். அதேபோல், முலைக்காம்புகளில் ஏதேனும் மாறுபாடுகள், நிறம் மாறி முலைக்காம்பு வெளியே தள்ளுதல் மேலும் தொடர்ந்து அல்லது விவரிக்க முடியாத மார்பக வலி ஆகியவை மருத்துவரிடம் கூறவேண்டிய முக்கிய குறிப்புகள் ஆகும். இவையே நோயை மதிப்பீடு செய்ய மருத்துவரருக்கு உதவும் கூடுதல் காரணிகளாகும்.
குடும்பத்தில் வேறு எவருக்காவது மார்பக புற்றுநோய் இருந்தால் மரபணு ரீதியாக முன்கணிப்பு செய்வது அவசியம். அதனால் பெண்களுக்கு, ஆரம்ப அறிகுறிகளைப் பற்றி அறிந்திருப்பது அவசியம் ஆகும். மார்பகத்தில் எந்தவொரு மாற்றங்கள் இருப்பினும் அதைப்பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக அவை இளம் வயதில் ஏற்பட்டால் அல்லது குடும்பத்தில் பல உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அது ஆண்களுக்கும் மார்ப புற்று வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன. அறியப்பட்ட BRCA மரபணு மாற்றங்கள் உள்ளன.
பெரும்பாலான மார்பக புற்றுநோய் அறிகுறிகளை பெண்கள் வழக்கமான தினசரி நடவடிக்கைகளில் கண்டுபிடித்துவிடலாம். உதாரணமாக குளித்தல் அல்லது டியோடரண்ட் பயன்பாடு போன்றவற்றின் போது கண்டறியப்படுகின்றன. மார்பகத்தின் தோற்றம் மற்றும் அமைப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். எந்த அறிகுறிகளுக்கும், குறிப்பாக கட்டிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மார்பகப் புற்றுநோயின் தீவிரத்தன்மையின் அறிகுறிகளைக் காட்டாமல், பெண்கள் ஏதேனும் மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகளை அனுபவித்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். ஏனெனில் நோயறிதலை தாமதப்படுத்துவது, விளைவுகளை மோசமாக்கும்.
வழக்கமான மருத்துவ மார்பக பரிசோதனைகள் மற்றும் மேமோகிராம்கள் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கு பரிந்துரைக்கப்படுகின்றன. இது சரியான நேரத்தில் கண்டறிந்து மேம்பட்ட சிகிச்சை அளிக்க உதவுகிறது. இதன் மூலமாக பெண்களின் மார்பக ஆரோக்யம் பேணப்படுகிறது.
லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மோனிகா குலாட்டி தனது நிபுணத்துவத்தைக் கொண்டு, “மார்பகப் புற்றுநோயின் பொதுவான எச்சரிக்கை அறிகுறி, ஒருபோதும் புறக்கணிக்கப்படக் கூடாதது மார்பகங்களில் கட்டிகள் அல்லது மாறுமாடான தோற்றம் போன்றவை இருந்தால் உடனே கவனிக்கப்படவேண்டும். அக்குள் கட்டி கூட மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
மார்பகப் புற்றுநோய் அக்குள்களில் இருக்கும் நிணநீர் முனைகள் வழியாகப் பரவுவதாக அறியப்படுகிறது. எனவே, மார்பகத்திலோ அல்லது அக்குள்களிலோ ஏதேனும் கட்டி இருந்தால் அவைகளை பரிசோதிக்க வேண்டும். மேலும், மார்பகத்தில் கட்டி போல் உணராத எந்த வகையான வீக்கத்தையும் அலட்சியம் செய்யக்கூடாது.
சில ஒவ்வாமைகள், நோய்த்தொற்றுகள் அல்லது கர்ப்பம் போன்ற சில நிலைமைகள் அத்தகைய வீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்றாலும், குறிப்பாக எரிச்சல், சிவத்தல், பள்ளம் அல்லது அளவு, மார்பக காம்பில் மாற்றம், அமைப்பு அல்லது வெப்பநிலையில் ஏதேனும் அசாதாரண மாற்றங்கள் இருந்தால், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
முலைக்காம்புகளில் இருந்து வெளிப்படையான, இரத்தம் தோய்ந்த அல்லது எந்த நிறத்திலும் அசாதாரண வெளியேற்றம் இருந்தாலும் அது ஒரு எச்சரிக்கை சமிக்ஞையாகும். முலைக்காம்பு பகுதியில் ஏதேனும் அரிப்பு, எரிச்சல் உணர்வு அல்லது புண் ஏற்பட்டால் மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இங்கே சேர்க்கப்பட வேண்டிய மற்றொரு முக்கியமான உண்மை மார்பக புற்றுநோய்கள் ஆண்களுக்கும் ஏற்படுகின்றன. பொதுவாக அவை அரிதானவை என்பதால் கவனிக்கப்படுவதில்லை. எனவே, ஆண்களிடையே இதுபோன்ற அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் ஆபத்தான சமிக்ஞையாகக் கருதப்பட வேண்டும்.