ஆரோக்யத்தை கெடுக்கும் அமைதி வில்லன் யார் தெரியுமா..? தெரிஞ்சிக்கங்கப்பா..!

பொதுவாக ஒரு காரியத்தை முடிக்கவேண்டும் என்று தீர்மானம் செய்துவிட்டால் அதை முடிக்கும் வரை தூக்கம் வராது. அது ஒரு இலட்சியம். சும்மாவே தூக்கம் வரலைன்னா அது ஒரு நோய்.

Update: 2024-06-25 11:19 GMT

sleeping disorder in tamil-தூக்கமின்மை பிரச்னை (கோப்பு படம்)

Sleeping Disorder in Tamil, Insomnia,Symptoms of Sleeping Disorder

உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை அமைதியாகப் பாதிக்கும் ஒரு அமைதி வில்லனான ஒரு பெருநோய், தூக்கமின்மைதான். இந்த நெருக்கடியை நம்மில் பலரும் எதிர்கொள்கிறோம். இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னன்னா போதுமான தூக்கம் இல்லாமல் போராடும் பெரும்பாலான மக்களுக்கு அதனால் ஏற்படும் தீங்குகள் மற்றும் விளைவுகள் அறியாமல் இருப்பது.

Sleeping Disorder in Tamil,


அட அது என்ன தூக்கம் வராதது ஒரு பெரிய விஷயமா என்று பலர் தூக்கமின்மையை ஒரு சிறிய பிரச்னையாக நினைத்து அதை அலட்சியம் செய்கிறார்கள். மேலும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தது கவலையற்றும் இருக்கிறார்கள்.

ஆசியாவின் முன்னணி ENT அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் விகாஸ் அகர்வால், "2023 ஆம் ஆண்டு டெல்லி AIIMS ஆய்வின்படி, 104 மில்லியனுக்கும் அதிகமான உழைக்கும் வயதுடைய இந்தியர்கள் தூக்கக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறியுள்ளார்.

இந்த தூக்கமின்மை நெருக்கடியால் ஏற்படும் விளைவுகள் தொலைநோக்குடையவை. மேலும் ஒருவரின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் நீட்டிப்பாக தொடரும் தன்மையுடையது. "இது அவர்களின் அறிவாற்றல் செயல்பாடுகள், மனநிலை நிலைத்தன்மை மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. பொதுவான விளைவுகளில் கவனம் குறைதல், எரிச்சல், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் நாள்பட்ட நோய்களில் ஏற்படும் அதிக ஆபத்து ஆகியவை அடங்கும்.

தூக்கமின்மை நெருக்கடிக்கு உடல், மருத்துவம் மற்றும் மனநலம் சார்ந்த பல்வேறு காரணிகள் காரணமாக இருக்கலாம். அவை நபருக்கு நபர் மாறுபடும்,” என்று அவர் விளக்குகிறார்.

Sleeping Disorder in Tamil,

மருத்துவக் காரணிகள் தூக்கப் பிரச்சனைகளுக்குப் பங்களிக்கும் அதே வேளையில், முறையான மருத்துவத் தலையீடு தேவைப்படும். பெரும்பாலும், மோசமான தூக்கம் வாழ்க்கை முறை தொடர்பான காரணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

“இவை ஒழுங்கற்ற தூக்கம், தூங்கப்போகும் நேரங்களில் அதிகப்படியான காபி அல்லது டீ உட்கொள்ளல், படுக்கைக்கு முன் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துதல், வசதியான தூக்க சூழலை உருவாக்காமல் இருப்பது, இரவில் அதிக உணவை உட்கொள்வது மற்றும் தூங்குவதற்கு முன் தூண்டுதல் செயல்களில் ஈடுபடுவது.

இந்த பழக்கங்கள் உங்கள் தூக்கத்தின் தரத்தையும் ஒட்டுமொத்த தூக்க முறையையும் சீர்குலைக்கும். கூடுதலாக, உங்கள் நடத்தை முறைகளில் கோபம் மற்றும் உங்கள் மனதைத் தளர்த்த முடியாமல் இறுக்கமாக இருக்கும். அன்றைய நிகழ்வுகளைப் பற்றி எப்போதுமே அதிகமாகச் சிந்தித்துக்கொண்டிருப்பது ஆகியவை அடங்கும். இந்த நிலைகள் நீடிப்பின் உங்களுக்கு நல்ல தூக்கம் வர வாய்ப்பில்லை.

Sleeping Disorder in Tamil,

நீங்கள் போதுமான அளவு தூங்கவில்லை என்பதை எப்படி அறிவது?

பலர் தங்களுக்கு போதுமான தூக்கம் கிடைப்பதாக நம்புகிறார்கள். மேலும் அவர்களின் மோசமான தூக்கத்தின் தரம் தெரியாது. இதன் விளைவாக, அவர்கள் நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறார்கள். எனவே, நிலைமையைத் தீர்ப்பதற்கான முதல் படி, உங்களுக்குள் ஒரு சிக்கல் இருப்பதைக் கண்டறிவதாகும்.

வரையறையின்படி, நீங்கள் படுக்கைக்குச் சென்ற பிறகு தூங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டாலும், கவலையுடன் ஒரு இரவுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை தவறாமல் எழுந்தாலும், உங்களுக்கு ‘நல்ல தூக்கம்’ வரவில்லை என்று டாக்டர் விகாஸ் பகிர்ந்து கொள்கிறார்.

Sleeping Disorder in Tamil,

உங்களுக்கு போதுமான தூக்கம் வரவில்லை என்று சொல்லக்கூடிய வேறு சில அறிகுறிகள் இங்கே:

  • எவ்வளவு தூங்கினாலும் பகலில் சோர்வாக உணர்தல்
  • இரவில் பல முறை எழுந்ததும், மீண்டும் தூங்குவதில் சிக்கல்.
  • குறட்டை உங்கள் தூக்கத்தின் தரத்தையும் பாதிக்கலாம்.
  • எரிச்சல், பதட்டம் அல்லது மனச்சோர்வு ஆகியவை தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கலாம்.
  • பணிகளில் கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் அறிவாற்றல் செயல்திறன் குறைதல்.

நாம் தெரிந்து கொள்ள வேண்டியது

நாம் அனைவரும் பரபரப்பான வாழ்க்கையை வாழ்கிறோம். நமது பரபரப்பான வாழ்க்கை முறையில் முக்கியமான விஷயங்களுக்கு சிறிது நேரம் ஒதுக்குவதில்லை, ஒழுங்கற்ற வேலை வரைமுறை, மேலும் நிலையான உடல் செயல்பாடு இல்லாமை உட்பட பல்வேறு நிலைகளில் ஒழுக்கம் இல்லாதது.

Sleeping Disorder in Tamil,


திரை நேரத்தை (செல்போன் அல்லது டிவி அதிக நேரம் பார்த்தல்) அதிகமாகப் பயன்படுத்துதல் மற்றும் திரைகளால் வெளிப்படும் நீல ஒளி ஆகியவை மெலடோனின் உற்பத்தியை அடக்கி, தூக்கத்தைப் பாதிக்கிறது. அதிக எடை உள்ளவராக அல்லது பருமனாக இருந்தால், அது தூக்கத்தையும் பாதிக்கிறது. மூக்கு அல்லது சுவாச ஒவ்வாமை கூட நல்ல தூக்கத்தை கெடுப்பதற்கு வழிவகுக்கும். ஆல்கஹால் அதிகமாக உட்கொள்ளுதல் மற்றும் மனச்சோர்வு அடைதல் ஆகியவையும் ஹூக்கமின்மையை ஏற்படுத்தும்.

மோசமான தூக்கத்தைப் பற்றி விவாதிக்கும்போது, ​​​​மன அழுத்தத்தின் பங்கைக் கவனிக்காமல் இருக்க முடியாது. "அதிக மன அழுத்த நிலைகளும் உடலைப் பாதிக்கின்றன. இது ஒரு சமூக நெருக்கடியும் கூட- அதிக எண்ணிக்கையிலான தனி குடும்பங்கள் உள்ளன. இந்த குடும்பங்களில் பெரும்பாலும் அதிர்ச்சி முழுமையாக தீர்க்கப்படுவதில்லை. சில ஆழமான தாக்கங்கள் அலலது பேரழிவுகள் மனதில் பெரும் வடுவாக பதிந்து போயிருக்கும். அதேபோல சில சமூக ஊடகங்கள் மூலமாகவும் ஆழமான பேரழிவுகள் கையாளப்படுகின்றன”என்று டாக்டர் விகாஸ் கூறுகிறார்.

Sleeping Disorder in Tamil,


நமது சில்லரைத் தனமான வாழ்க்கைப் போக்கு, எந்நேரமும் செல்போன் நோண்டுவது, இரவு நேரத்தில் நெடுநேரமாக ஏதாவது ஒரு நடிகனின் படத்தை உட்கார்ந்து பார்ப்பது என்று ஏதாவது ஒரு பைத்தியக்காரத்தனமாக இருக்கலாம்.

இதற்கு மத்தியில், ஆரோக்கியமான தூக்க பழக்கங்களுக்கும் முன்னுரிமை அளிப்பது அவசியம். முறையான தூக்கத்திற்கு அளிக்கவேண்டிய முக்கியத்துவத்தை கவனிக்காமல் இருக்க முடியாது. ஆரோக்கியமான மற்றும் செறிவான எதிர்காலத்திற்காக உறக்கப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்முயற்சியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

Tags:    

Similar News