நல்லெண்ணெயை ஏன் நல்லெண்ணெய் என்று சொல்கிறோம்..? தெரிஞ்சுக்கோங்க..!
Sesame Oil Meaning in Tamil-என்ன வேணும்? எண்ணெய்தான் வேணும்? அட.. நல்ல எண்ணெய்தான் வேணும்...ஓ.நல்லெண்ணெயா..?
Sesame Oil Meaning in Tamil
எள் + எண்ணெய் = எள்ளெண்ணெய் என்பதே நல்ல எண்ணெய் என்ற பதத்தில் நல்லெண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. 'நல்ல' என்ற வார்த்தை எண்ணெயோடு சேர காரணம் அதில் உள்ள நன்மைகள்தான். அந்த அளவுக்கு மனித உடலுக்கு பல நன்மைகள் அளிப்பதாக உள்ளது எள்ளெண்ணெய் சாரி நல்லெண்ணெய்.
நல்லெண்ணெயில் வைட்டமின் 'ஈ' சத்து அதிகம் உள்ளது. அதனால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது.
முன்பெல்லாம் வாரம் ஒருமுறை குழந்தைகளுக்கு அது இளைஞனாக இருந்தாலும் சரி இளைஞியாக இருந்தாலும் சரி சனிக்கிழமையானால் அம்மாக்கள் நல்லெண்ணெய் தலைக்குத் தேய்த்துவிட்டு குளிக்கவைப்பார்கள். குறிப்பாக கிராமங்களில் இது தவறாமல் நடக்கும்.
வாரத்தில் ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடல் சூடு குறையும். தலைமுடியின் வறட்சி நீங்கும். பொடுகு வருவது முற்றிலும் நீங்கும். நல்லெண்ணெய் மிகவும் பிரபலமான பல்வேறு க்ரீம்கள், ஆயின்மென்ட், சோப்புகள் போன்றவைகளில் கலவைப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதன்மொல்லாம் சருமத்திற்கு நல்ல பயன்கள் கிடைக்கின்றன.
நல்லண்ணெய் நமக்கு என்னென்ன நன்மைகளைத் தருகின்றன என்பதை பார்ப்போம் வாருங்கள்.
எண்ணெய் படிந்த முகம்
நல்லெண்ணெய் சருமத்தின் மேல் பகுதியில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதனால் முகப்பரு மற்றும் பருக்கள் ஏற்படுவதையும் அதனால் உருவாகும் தழும்புகளையும் மறையச் செய்யும். அதற்கு தினமும் 1 டீஸ்பூன் நல்லஎண்ணெய், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பஞ்சில் நனைத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவினால் நல்ல பலன் தெரியும். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் வருவது குறைவதோடு, தழும்புகளும் மறையும்.
சரும வறட்சி
சரும வறட்சி என்பது பலருக்கும் வந்து அவதிப்படுவார்கள். இந்த சரும வறட்சியைத் தடுக்க பல்வேறு வழி முறைகள் உள்ளன. அதில் ஒன்று நல்லெண்ணெய். நல்லெண்ணெயை பயன்படுத்தினால், சருமம் பொழிவாக இளமையாக இருக்கும். சருமம் மிருதுவாக இருப்பதுடன் புத்துணர்ச்சியுடனும் காணப்படும். அதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து நன்றாக குலுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை முகம், கை, கால்களில் ஸ்ப்ரே செய்ய வேண்டும். இப்படி தினமும் பயன்படுத்தினால் சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.
பெண்கள் விரும்பும் இளம்சிவப்பு நிற உதடு
நல்லெண்ணெய் உதடுகளுக்கு அழகான நிறத்தை வழங்குவதுடன் உதடு மென்மையாக காட்சிதரும். தினமும் நல்லெண்ணெயை உதடுகளுக்கு தடவி வந்தால், உதடுகள் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு அழகான உதடாக இருக்கும். லிப்ஸ்டிக் போடவே வேண்டாம். அதற்கு தினமும் இரவில் படுப்பதற்கு முன் உதட்டில் நல்லெண்ணெயை தடவிக் கொள்ளவேண்டும். தொடர் பயன்பாடு மட்டுமே நல்ல பலனைத்தரும். இன்னிக்கு நல்லெண்ணையை தடவி விட்டு அடுத்த நாள் உதடு நிறம் மாறாது. தினமும் பயன்படுத்தி வந்தால் மட்டுமே முழுமையான பலனைக் காண முடியும்.
இயற்கை மேக்கப் ரிமூவர்
மேக்கப் கலைப்பதற்கு இரசாயனம் கலந்த ரிமூவரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க நினைத்தால் அதற்கு சிறந்த மாற்று நல்லெண்ணெய். இயற்கை வழியில் மேக்கப்பை நீக்க நல்லெண்ணெய் சிறந்தது. அதுவும் பஞ்சில் நல்லெண்ணெயை நனைத்து, முகத்தை தினமும் துடைத்து எடுக்கவேண்டும். குறிப்பாக முகத்தில் எண்ணெயை தேய்க்கும்போது பஞ்சில் மேல்நோக்கித் தேய்க்கவேண்டும். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், மேக்கப் முழுமையாக நீங்குவதோடு, சருமமும் வறட்சியடையாமல் இருக்கும்.
கால் வெடிப்பு
நல்லெண்ணெயில் ரோஸ் வாட்டர் கலந்து பூசினால் குதிகாலில் ஏற்படும் வெடிப்புகளை சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டரை சம அளவில் கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் குதிகாலில் தடவவேண்டும். மறுநாள் காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரால் குதிகாலை கழுவுங்கள். இதனால் விரைவில் குதிகால் வெடிப்பு போயே போய்விடும்.
சருமம் கருத்தல்
அடடா கோடை வெயில் வந்துடிச்சி இனிமேல் இந்த சருமத்தை பாதுகாப்பதே பெரிய வெளியாக இருக்கும் என்று இளம் பெண்கள் பதறிவிடுவார்கள். காரணம் கோடையில் சருமம் வெயில் பட்டு வியர்ப்பதுடன் சருமமும் கருத்துப்போகும். இதைத் தடுப்பதற்கு நல்லெண்ணெய் அருமையான மருந்து. ஆமாங்க.. அதற்கு 1 டீ ஸ்பூன் கடலை மாவை பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீ ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கருத்துப்போன பகுதிகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்க.
கூந்தல் பளபளப்பு
சிலருக்கு தலைமுடி சீராக இல்லாமல் வறட்சியாகவும் முடி பிளவுப்பட்டும் இருக்கும். அப்படி உள்ளவர்கள் தலைமுடிக்கு நல்லெண்ணெய் பயன்படுத்துங்கள். உங்கள் தலைமுடிக்கு தேவையான அளவு நல்லெண்ணெயை தலையில் தடவி, நன்றாக மசாஜ் செய்யவேண்டும். அவ்வாறு மசாஜ் செய்யும்போது முடியின் வேர்களுக்குள் நல்லெண்ணெய் இறங்கும். 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீர் கொண்டு கழுவுங்கள். இதைப்போல வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் மசாஜ் செய்தால், தலைமுடி வறட்சியின்றி மென்மையாக இருக்கும். முடிகளில் பிளவும் ஏற்படாது.
கண்கள் சோர்வு
நீண்ட நேரம் கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் கூர்ந்து பார்த்து செய்யவேண்டிய வேலைகளை செய்பவர்களுக்கு கண்கள் சோர்வடைவது இயல்பு. அதேபோல சிலருக்கு கருவளையங்களும் காணப்படலாம். அப்படி உள்ளவர்கள் நல்லெண்ணெய் பயன்படுத்தி சரிசெய்யலாம். நல்லெண்ணெயை ப்ரிட்ஜில் வைத்து குளிரச் செய்யவேண்டும். பஞ்சைப் பயன்படுத்தி, கண்களின் மீது மென்மையாக தடவ வேண்டும். இப்படி செய்தால், வீங்கிய கண்களின் வீக்கம் குறைவதோடு, கருவளையங்களும் நீங்கிவிடும்.
இப்போ தெரியுதா.. எள்ளெண்ணெய்க்கு ஏன் நல்லெண்ணெய் என்று சொல்கிறார்கள் என்று? நம் முன்னோர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல. அவர்கள் அறிவாளிகள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2