Piles Treatment In Tamil-மூலத்திற்கு நிரந்தர தீர்வுதான் என்ன? தெரிஞ்சுக்கங்க..!

வெளிமூலம், உள்மூலம், ரத்தமூலம், மூலக்கடுப்பு போன்ற பிரச்னைகளை 1 வாரத்தில் இருந்து 15 நாட்களில் தீர்வளிக்க சிறந்த முறைகளை அறிவோம் வாருங்கள்.;

Update: 2023-10-09 06:26 GMT

Piles Treatment In Tamil-மூலநோய் (கோப்பு படம்)

Piles Treatment In Tamil

மூல நோய் இருப்பவர்கள் நிம்மதியாக ஒரு வேலையும் செய்ய முடியாது. மலம் கழிப்பதை நினைத்தாலே வலியும், அருவருப்பும், இரத்தக்கசிவு குறித்த ஒவ்வாமையும் ஏற்பட்டு விடும்.ரொம்ப நாளாக மலச்சிக்கல், மலம் கழிப்பதில் சிக்கல் இருந்தால் மூலநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்க்கு சில அறிகுறிகள் உள்ளன. குத பகுதியில் அரிப்பு, வலி போன்றவை ஏற்படும். குடல் இயக்கத்தில் குறைபாடும், இரத்தக்கசிவும் இருக்கும்.

Piles Treatment In Tamil


Piles Treatment In Tamil

மூல நோய் ஏற்பட சில காரணங்கள் உள்ளன

அதிக எடை தூக்குவது, நார்ச்சத்து குறைவாக இருக்கும் உணவுகளை சாப்பிடுதல், காரம், மசாலா அதிகமாக இருக்கும் உணவை எடுத்துக் கொள்ளுதல், அதிக உடல் எடை, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்வதும் மூல நோய் ஏற்பட காரணங்களாகும். இந்த மூல நோய்க்கு எப்படி தீர்வு காண்பது என்பதைக் காணலாம்.


மூலத்திற்கான காரணம்

  • மூலம் ஒருவருக்கு ஏற்பட முதன்மை காரணமாக இருப்பது மலச்சிக்கல் ஆகும். தினமும் மலம் கழிக்க முடியாதவர்களுக்கு இப்பிரச்னை உருவாக அதிகம் வாய்ப்புள்ளது.
  • ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து பணிபுரிவது பைல்ஸ் வர ஒரு காரணம் ஆகும்.
  • உடலில் உஷ்ணம் அதிகரித்தாலும் பைல்ஸ் வர வாய்ப்புகள் உள்ளது.
  • தேவையான அளவு அதிகம் நீர் அருந்தாமல் இருப்பது மூலம் வர காரணம் ஆகும்.
  • காரம் மிகுந்த மற்றும் மாமிச உணவுகளை அதிகம் உண்ணல் ஆகியவை இந்த மூலநோய் ஏற்பட காரணங்கள் ஆகும்.

Piles Treatment In Tamil


மூலநோய் அறிகுறிகள்

ஆசன வாய் சதையில் ஒரு புடைப்பு ஏற்படும். இந்த மூலநோயில் ஆசனவாய்க்கு உட்புறமாக ஏற்படும் புடைப்பு உள்மூலம் எனவும், அந்த உட்புற சதையிலிருந்து மலம் கழிக்கும் போது ரத்தம் கசிந்தால் அது ரத்த மூலம் என வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. அமரும் போதும், மல்லாந்து படுக்கும் போதும் லேசாக வலிக்கும். அந்த இடத்தில் தொடர்ந்து சிலருக்கு அரிப்பு ஏற்படும். மனதில் ஒரு நிம்மதியற்ற நிலை ஏற்படும்.

மூலம் குணமாக மருத்துவ குறிப்புகள்

  • முதலில் எவருமே தங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கார உணவுகளையும், மாமிச உணவுகளையும் உண்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

Piles Treatment In Tamil

  • மூலம் ஏற்பட்டிருக்கும் இடத்தில் விளக்கெண்ணெயைத் தடவி வர மூலம் குணமாகும்.
  • துத்தி இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி, மூலம் ஏற்பட்டிருக்கும் இடத்தில் களிம்புபோல் வைத்துக் கட்ட வேண்டும். இதன் மூலம் மூலம் குணமாகும்.
  • அருகம்புல் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவது நல்லது.
  • பப்பாளி பழ துண்டுகளை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வர வேண்டும்.
  • முள்ளங்கி ஜூஸ் பைல்ஸ் இருந்தால் ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் குடித்தால், சரியாகிவிடும். அதிலும் எடுத்தவுடன் ஒரு டம்ளரை குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து குடித்து வந்தால், சரியாகிவிடும்.
  • மாதுளை தோல் இந்த சிவப்பு நிற மாதுளைப் பழத்தின் தோல் பைல்ஸ் பிரச்சனையை சரிசெய்யும். அதற்கு மாதுளையின் தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை தினமும் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் குடித்தால், சரியாகிவிடும்.

Piles Treatment In Tamil

  • இஞ்சி மற்றும் எலுமிச்சை ஜூஸ் நீர் வறட்சியும் பைல்ஸ் பிரச்னைக்கு ஒரு காரணம். எனவே தினமும் இரண்டு முறை இஞ்சி மற்றும் எலுமிச்சையை நீரில் கலந்து ஜூஸ் போன்று குடித்து வந்தால், உடலில் வறட்சி குறைந்து, மூலம் சரியாகிவிடும்.
  • அத்திப்பழத்தில் உலர்ந்ததை வாங்கி, அதனை இரவில் படுக்கும் போது ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும் பாதியை குடித்துவிட்டு, மீதியை மாலையில் குடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கல் மற்றும் மூலம் குணமாகிவிடும்.
  • சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால், மூலநோயால் ஏற்படும் இரத்தப் போக்கை சரிசெய்துவிடலாம். அதுமட்டுமின்றி, அவை மலவாயில் ஏற்படும் வலியையும் குணமாக்கும்.

Piles Treatment In Tamil


பழைய சோறு

ஒரு மண்சட்டி அல்லது சிறிய மண்பானை இந்த முறைக்கு சிறந்த பலன்தரும். ஏனெனில் மண்பாத்திரத்தில் தான் மூல நோய்க்கான தீர்வு உள்ளது. இந்த மண்பாத்திரத்தில் 1 கப் ஆறிப்போன சோறு போட்டு கொள்ளுங்கள். இதில் 2, டம்ளர் தண்ணீர், பொடியாக நறுக்கிய 5 சின்ன வெங்காயம், கல் உப்பு போட்டு கொள்ளுங்கள். கொஞ்சம் கரிக்கும் சுவையில் உப்பு போட்டு கொள்ளுங்கள். இதை மூடி வைத்துவிடுங்கள். இது 8 முதல் 12 மணி நேரம் இதை நன்றாக ஊறவிட வேண்டும்.

இதை இரவில் செய்து வைத்துவிடுவது நல்லது. படுக்கும் முன்பு இந்த பொருள்களை மண்சட்டியில் போட்டு ஊறவைத்துவிட்டால் காலையில் தயாராகிவிடும். இந்த ஊறலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ஏராளமாக உள்ளன. காலையில் மண்சட்டியில் இருக்கும் பழைய கஞ்சியை வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும். குடிக்கும் முன்பு கைகளால் அதை கரைத்து கூழ் மாதிரி ஆனதும் குடியுங்கள். இந்த அற்புத பானத்தை குடித்த 30 நிமிடங்களில் மலக்குடலில் இருக்கும் அசடுகள் கழிவுகள் வெளியே வந்துவிடும். இப்படி 1 வாரம் முதல் 2 வாரம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Piles Treatment In Tamil


இந்த கஞ்சியை குடிக்கும் காலங்களில் உப்பு, புளி, காரம் ஆகியவை உணவில் குறைவாக சேருங்கள். நாட்டு மருந்து கடைகளில் துத்திக் கீரை பொடியை கேட்டால் கொடுப்பார்கள். அதை வாங்கி மோரில் கலக்கி பருகுங்கள். துத்திக் கீரை உங்களுக்கு கிடைத்தால் அதை சமைத்து சாப்பிடுங்கள். இந்த விஷயங்களை பின்பற்றினால் எந்த பக்கவிளைவும் இல்லாமல் மூல நோயை விரட்டி அடிக்கலாம்.

மருத்துவ நிபுணர்களின் கருத்து

சில மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி மேற்கூறப்பட்டுள்ள உணவுமுறைகள் தற்காலிக தீர்வுக்கானது மட்டுமே. மூல நோய் முற்றிவிட்டால் அறுவைச் சிகிச்சை செய்வதே நிரந்தர  தீர்வாக இருக்கும் என்கின்றனர்.

Tags:    

Similar News