Peanut Meaning In Tamil-வேர்க்கடலை சாப்பிடுங்க..! ஆரோக்யமா இருங்க..!
வேர்க்கடலை நமது தினசரி வாழ்க்கையில் ஒரு கொறிக்கும் தீனியாக இருந்து வருகிறது. தமிழக நகரங்களின் பேருந்து நிலையங்கள் இதற்கு சாட்சியாக இருக்கின்றன.;
Peanut Meaning In Tamil
நிலக்கடலை அல்லது வேர்க்கடலை என்று அழைக்கப்படும் இது இந்தியாவில் அதிகம் விளைவிக்கப்படும் பயிர்களில் ஒன்றாகும். எண்ணெய் எடுப்பதற்காக அதிகம் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் வேர்க்கடலையை அவித்தும், வறுத்தும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
Peanut Meaning In Tamil
கடலை மிட்டாய், கடலை உருண்டை செய்யப்பட்டு இவைகளும் அதிகமாக உண்ணப்படுகிறது. கடலை மிட்டாய் செய்வதற்காகவே தமிழ்நாட்டில் பல சிறுதொழில் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு தனி பெருமையும் பேரும் உல்ளது.
வேர்க்கடலையில் உள்ள ஊட்டச்சத்து விவரங்கள்
100 கிராம் வேர்க்கடலையில் உள்ள பின்வரும் ஊட்டச்சத்து தகவல்களை யாவும் United States Department of Agriculture (USDA) அமைப்பால் வழங்கப்பட்டது.
Peanut Meaning In Tamil
கலோரிகள்- 567 கிலோகலோரி
மொத்த கார்போஹைட்ரேட் - 16 கிராம்
உணவு நார்ச்சத்து - 9 கிராம்
சர்க்கரை - 4 கிராம்
புரதம் - 26 கிராம்
மொத்த கொழுப்பு - 49 கிராம்
நிறைவுற்ற கொழுப்பு - 7 கிராம்
ஒற்றை நிறைவுற்ற கொழுப்பு - 24 கிராம்
கொலஸ்ட்ரால் - 0 மில்லி கிராம்
சோடியம் - 18 மில்லி கிராம்
பொட்டாசியம் - 705 மில்லி கிராம்
வைட்டமின் B1 - 0.9 மில்லி கிராம்
வைட்டமின் B2 - 0.2 மில்லி கிராம்
நியாசின் - 17.6 மில்லி கிராம்
வைட்டமின் B6 - 0.5 மில்லி கிராம்
ஃபோலேட் - 350 மில்லி கிராம்
கால்சியம் - 134 மில்லி கிராம்
இரும்பு - 6.7 மில்லி கிராம்
மக்னீசியம் - 245 மில்லி கிராம்
பாஸ்பரஸ் - 549 மில்லி கிராம்
Peanut Meaning In Tamil
வேர்க்கடலையை வறுத்தோ, வேக வைத்தோ சாப்பிடுவதால் அதன் சத்தும் அதிகமாகிறது. இதனால் இரண்டு முதல் நான்கு பங்கு உயிர்ச்சத்து கூடுதலாகக் கிடைக்கிறது.
இதயத்திற்கு நல்லது
வேர்க்கடலை மற்றும் அதன் தயாரிப்புகளான கடலை மிட்டாய் மற்றும் கடலை எண்ணெய் போன்றவை மற்ற குறைந்த கொழுப்புள்ள உணவுகளை விட இதய ஆரோக்யத்திற்கு அதிக நன்மைகளை வழங்குகின்றன.
நிலக்கடலையில் அதிக அளவு மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இது மொத்த உடல் கொழுப்பு மற்றும் LDL கொழுப்பையும் (கெட்டது) குறைக்க உதவுகிறது. இதன் விளைவாக, வேர்க்கடலை உட்கொள்வதால், இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைத் தடுக்க முடியும்.
Peanut Meaning In Tamil
எடை குறைய
வேர்க்கடலையில் புரதங்கள் மற்றும் ஆரோக்யமான கொழுப்புகள் நிரம்பியுள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் எடை அதிகரிப்பதைத் தடுக்க உதவுகின்றன.மேலும், வேர்க்கடலையை சாப்பிடுவது பசியை நீக்கி மனநிறைவான உணர்வைத் தருகிறது. இது உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு உதவுகிறது
Peanut Meaning In Tamil
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது
வேர்க்கடலை 23 என்ற குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் (GI) கொண்டுள்ளது. எனவே இவை உங்கள் இரத்தச் சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தாது.
மேலும், அவற்றில் கார்போஹைட்ரேட் குறைவாகவும் மற்றும் புரதம், நார்ச்சத்து போன்ற மற்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. நார்ச்சத்து மற்றும் புரதம் பசியின்றி நீண்ட நேரம் திருப்தியுடன் உங்களை வைத்திருக்கும்
Peanut Meaning In Tamil
நரம்பு சிதைவு நோய்களை தடுக்கிறது
வேர்க்கடலையில் பாலிஃபீனால்கள் போன்ற ஆன்டிஆக்சிடென்டுகள் மிக அதிகமாக உள்ளன. இந்த ஆன்டிஆக்சிடென்ட்டுகள் நரம்புஅழற்சியைத் தடுத்து, அல்சைமர் எனும் நரம்புசிதைவு நோய்க்கு எதிராக செயல்படுகின்றன
Peanut Meaning In Tamil
பித்தப்பைக் கற்களை தடுக்கிறது
வட இந்தியாவில் பித்தப்பை கற்களால் பாதிக்கப்பட்டோர் மிக அதிகம். குறிப்பாக 41.5சதவீதம் பெண்களுக்கு பித்தப்பை கற்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. நிலக்கடலை தொடர்ந்து உட்கொள்வது, பித்தப்பை கற்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.
இதை உறுதிப்படுத்த மேலும் ஆய்வுகள் தேவைப்பட்டாலும், நிலக்கடலையின் கொழுப்பைக் குறைக்கும் விளைவு இதற்கு உதவலாம் என அறியப்படுகிறது.
Peanut Meaning In Tamil
மூளைக்கு இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது
வேர்க்கடலையில் பி.காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் எனப்படும் ரிபோப்ஃபிளேவின், நியாசின், தயாமின், பேண்டோதெனிக் ஆசிட், விட்டமின் பி6 மற்றும் போலேட் ஆகியன அடங்கியுள்ளன. இவை மூளையின் ஆரோக்கியத்துக்கும் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லவும் உதவுகின்றன.
சிறுநீர்ப்பை அழற்சி சீராக
வேர்க்கடலை எண்ணெய் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கரைத்து அன்றாடம் அருந்திவர சிறுநீர்ப்பை அழலையை போக்கி சிறுநீரை சிரமமின்றி கழிக்க உதவுவதோடு சிறு நீர்த்தாரை எரிச்சலையும் போக்கும்.
Peanut Meaning In Tamil
மேலும் சில நன்மைகள்..
- மலச்சிக்கலை உடைத்து மிகத் தாராளமாக மலத்தை சுத்திகரிக்கச் செய்கிறது.
- வேர்க்கடலையை வேக வைத்தாகிலும் வாணலியில் இட்டு வறுத்தாகிலும் வெல்லம் சேர்த்து சாப்பிடுவதால் உடலை வளர்க்கும் உரமாக விளங்கும்.
- வேர்க்கடலையைத் தோல் நீக்கி இடித்து மாவாக்கிப் பாலில் வேகவைத்துச் சாப்பிட்டு வருவதால் ஆண்மை அதிகரிக்கும்.
- ஒரு தேக்கரண்டி வேர்க்கடலை எண்ணெய் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வருவதால் பால்வினை நோயான கொனேரியா என்னும் ஒழுக்கு நோய் குணமாகும்.
- சீனமக்கள் கடலை எண்ணெயை கொனேரியா நோய்க்கும், மூட்டுத் தேய்மானம், மூட்டுவலி ஆகியனவற்றுக்கும் தூக்கமின்மைக்கும் பயன்படுத்துகின்றனர்.
- ஒரு நாளைக்கு ஒரு பிடி வேர்க்கடலை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு போதிய சத்துகள் கிடைக்கிறது.